என்ன! முகமது சிராஜ் 181.6 kph வேகத்தில் பந்துவீசினாரா? உண்மை என்ன தெரியுமா?
Mohammed Siraj Bowling Speed in IND vs AUS 2nd Test Match : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் 181.6 kph வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.

Mohammed Siraj Bowling Speed in IND vs AUS 2nd Test Match
Mohammed Siraj Bowling Speed in IND vs AUS 2nd Test Match : இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பகலிரவு ஆட்டமாக நடக்கும் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் ஸ்டார்க் வீசிய இன்னிங்சின் முதல் பாலிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறினார் இதன்பின்பு கே.எல்.ராகுலும், சுப்மன் கில்லும் ஓரளவு ஆஸ்திரேலியா பெளலர்களை சமாளித்து விளையாடினார்கள்.
test fastest delivary
ஸ்கோர் 60ஐ தாண்டிய நிலையில் எல்.ராகுல் 37 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட்டானார். பின்பு சுப்மன் கில்லும் 31 ரன்னில் நடையை கட்டினார். மேலும் ரிஷப் பண்ட் (21) கேப்டன் ரோகித் சர்மா (3), விராட் கோலி (7) ஆகியோரும் ஸ்டார்க் மற்றும் போலண்ட் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 109 ரன்களுக்கு பரிதவித்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் (22), நிதிஷ் குமார் ரெட்டி (42) ஆகியோர் அணியை ஓரளவு கவுரமான நிலைக்கு கொண்டு சென்றனர்.
டெய்லென்டர்கள் விரைவில் ஆட்டமிழக்க இந்தியா 180 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்ச்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளது. நாதன் மெக்ஸ்வீனி 38 ரன்களுடன், மார்னஸ் லாபுஸ்சேன் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
அஸ்வினை ஓரம் கட்டிய ரோகித்; தவறிழைத்த பெளலர்கள்; இந்தியா சொதப்பியது இப்படித்தான்!
India vs Australia Test
இந்த போட்டியில் ஒரு சுவராஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியது. அதாவது ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தபோது இந்திய அணியின் பாஸ்ட் பெளலர் முகமது சிராஜ் 24வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் அவர் மணிக்கு 181.6 கிமீ (181.6 க்ப்ஹ்) வேகத்தில் பந்துவீசியதாக ஸ்கோர் போர்டின் கீழே காட்டப்பட்டது. இதனை பார்த்து அனைவரும் வாயைப் பிளந்தனர்.
ஏனெனில் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசியவர் என்ற சாதனையை பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் வைத்துள்ளார். அவர் மணிக்கு 161.3 கிமீ வேகத்தில் பந்து வீசியதே இன்று வரை சாதனையாக தொடருகிறது. இதனால் சிராஜ், அக்தரின் சாதனையை முறியடித்து 181.6 கிமீ பந்துவீசி விட்டார் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டத் தொடங்கினர்.
Mohammed Siraj Bowling Speed in IND vs AUS 2nd Test Match
ஆனால் உண்மையில் சிராஜ் 181.6 கிமீ வேகத்தில் பந்துவீசவில்லை. ஆட்டோமேடிக் ஸ்கோர் போர்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிராஜ் 181.6 கிமீ வேகத்தில் பந்துவீசியதாக தவறுதலாக காட்டப்பட்டுள்ளது பின்பு தெரியவந்தது. சிராஜ் அந்த பந்தை மணிக்கு 147 கிமீ வேகத்தில் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.