அஸ்வினை ஓரம் கட்டிய ரோகித்; தவறிழைத்த பெளலர்கள்; இந்தியா சொதப்பியது இப்படித்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் முதல் நாளில் இந்திய அணி தடுமாறியது. இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
indian cricket team
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பகலிரவு ஆட்டமாக நடக்கும் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில், தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய இன்னிங்சின் முதல் பாலிலேயே முதல் டெஸ்ட் போட்டியின் சத நாயகன் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறினார் இதன்பின்பு கே.எல்.ராகுலும், சுப்மன் கில்லும் இணைந்து அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர்.
ind vs aus 2nd test
ஸ்கோர் 69 ஆக உயர்ந்தபோது 37 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல் ஸ்டார்க் பந்தில் மெக்ஸ்வீனியிடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். பின்பு பெரிதும் எதிர்பார்த்த கிங் கோலி 7 ரன்னில் ஸ்டார்க் பந்தில் நடையை கட்டினார். தொடர்ந்து ஸ்டார்க் மற்றும் போலண்ட்டின் சூறாவளி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சுப்மன் கில் (31 ரன்), ரிஷப் பண்ட் (21) கேப்டன் ரோகித் சர்மா (3) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார்கள்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 109 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து பரிதவித்தது. கடைசி கட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் (22), நிதிஷ் குமார் ரெட்டி (42) ஆகியோர் கணிசமான பங்களிப்பு அளித்து அவுட் ஆனார்கள். தொடர்ந்து பும்ரா, ஹர்சித் ரானா டக் அவுட்டில் வெளியேற இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்த மிட்ச்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
Australian Team
கேப்டன் பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். பின்பு ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய உஸ்மான் கவாஜாவும், நாதன் மெக்ஸ்வீனியும் மிகவும் பொறுமையாக கவனமுடன் ஆடினார்கள். ஸ்கோர் 24 ஆக உயர்ந்தபோது இந்த கூட்டணியை பிரித்த பும்ரா, கவாஜாவை 13 ரன்னில் வெளியேற்றினார்.
அதன்பின்பு மெக்ஸ்வீனியுடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபுஸ்சேன் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ஸ்டெம்புக்கு வெளியே சென்ற ப்ந்துகளை தொடவே இல்லை. மறுமுனையில் கவனமுடன் ஆடிய மெக்ஸ்வீனி ஷார்ட் பாலில் சில பெளண்டரிகளை விளாசினார். தொடர்ந்து பும்ரா, சிராஜ், ஹர்சித் ராணா என மாற்றி, மாற்றி பந்துவீசியும் கடைசிவரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழந்து 86 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவை விட ஆஸ்திரேலியா 94 ரன்கள் பின் தங்கியுள்ளது. கைவசம் 9 விக்கெட்டுகள் இருப்பதால் தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியாவே வலுவாக உள்ளது. முதல் நாளில் இந்தியாவின் சரிவுக்கு காரணம் பேட்ஸ்மேன்கள் தான். விராட் கோலி, கே.எல்.ராகுல் தேவையில்லாமல் வெளியே சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்து தவறிழைத்தனர்.
ashwin and rohit sharma
கேப்டன் ரோகித் சர்மாவும் பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதேபோல் நமது பவுலர்களும் சரியாக பந்துவீசினாலும், தொடர்ந்து ஸ்டெம்ப் லைனை நோக்கி பந்துவீசவில்லை. ஏறக்குறைய 90% பந்துகளை ஸ்டெம்ப் லைனுக்கு வெளியே வீசியதால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் எளிதாக பந்துகளை ஆடாமல் தவிர்த்து விட்டனர். மேலும் நமது பவுலர்கள் எக்ஸ்டிரா வகையில் மட்டும் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து விட்டனர்.
இது தவிர கேப்டன் ரோகித் சர்மா, அஸ்வினுக்கு முன்கூட்டியே ஓவர் கொடுக்காமல் நிதிஷ் குமார் ரெட்டியை பந்துவீச வைத்தது பலனனிக்கவில்லை. அஸ்வின் வெறும் 1 ஓவர் மட்டுமே போட்டார். கடந்த முறை அடிலெய்டில் நடந்த பிங்க் பால் டெஸ்ட்டில் அஸ்வின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், ரோகித் சர்மா அவரை முன்கூட்டியே பந்துவீச அழைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தர பேட்ஸ்மேன்களை அலறவிடும் பும்ரா: அவரோட சொத்து மதிப்பு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க