'ஹெட் சொல்வது பச்சை பொய், நடந்தது இதுதான்'; உண்மையை போட்டுடைத்த சிராஜ்!
2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் தவறாக பேசியது குறித்து முகமது சிராஜ் விளக்கம் அளித்துள்ளனர்.
Travis Head vs Mohammed Siraj
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது பிங் பால் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கடுமையாக சொதப்பியது. ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 180 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.மிட்ச்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
India vs Australia 2nd test
பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை விளாசித் தள்ளிய டிராவிஸ் ஹெட் 141 பந்தில் 140 ரன் எடுத்து அவுட் ஆனார். இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். பின்பு 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடி வரும் இந்தியா 150 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. கிட்டதட்ட இந்த டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், இந்திய வீரர் முகமது சிராஜ் இடையிலான மோதல்தான் இப்போது ஹாட் டாபிக் ஆக உள்ளது. அதாவது அதிரடி சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் சிராஜின் ஒரே ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே அவர் சிராஜின் சூப்பர் யார்க்கரில் கிளீன் போல்டானார்.
வார்த்தையை விட்ட ஹெட்; பதிலடி கொடுத்த சிராஜ்; பரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட்!
Mohammed Siraj Bowling
ஹெட் அவுட் ஆன உடன் சிராஜை பார்த்து சில வார்த்தைகளை கூறினார். சிராஜும் பதிலுக்கு கோபமாக 'வெளியே போ வெளியே போ'என்பதுபோல் சைகை செய்து அவரை வழியனுப்பி வைத்தார். பின்பு ஹெட்டும் கோபமாக சிராஜை நோக்கி சில வார்த்தைகளை பேசியபடி சென்றார். இதனல் கோபம் அடைந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் சிராஜை கிண்டல் செய்தனர்.
இந்த விவகராத்தில் சிராஜின் மேல்தான் தப்பு இருக்கிறது அவர் தான் ஹெட்டை வம்புக்கு இழுத்தார் என ஒரு தரப்பினரும், அவுட் ஆன கோபத்தில் ஹெட் சிராஜை பார்த்து கெட்ட வார்த்தை பேசினார். இதனால்தான் சிராஜ் கோபம் கொண்டார் என வேறு ஒரு தரப்பினரும் கருத்துகளை கூறி வருகின்றனர். பின்பு இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த டிராவிஸ் ஹெட், ''நான் அவுட் ஆன உடன் சிராஜிடம் நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள் என்றுதான் கூறினேன். அவர் அதை தப்பாக புரிந்து கொண்டு கோபமாக நடந்து கொண்டார்'' என்று கூறியுள்ளார்.
Travis Head Hundred
'ஆனால் ஹெட்டின் உச்சரிப்பை பார்க்கும்போது, அவர் well bowled என்று சொன்னதாக தெரியவில்லை. கெட்ட வார்த்தை பேசியதாக தெரிகிறது'' என இந்திய ரசிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசிய முகமது சிராஜ், ''நான் ஹெட் அவுட்டானபோது வழக்கம்போல் கொண்டாடினேன். அவரிடம் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் ஹெட் என்னை தவறாக பேசினார். அவர் என்னிடம் நன்றாக பந்துவீசினீர்கள் என்று கூறவில்லை. ஹெட் சொல்வது பொய். ஹெட் என்ன சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். நான் எல்லோரையும் மதிக்கிறேன். மற்ற வீரர்களை அவமரியாதை செய்வது எங்கள் வேலை அல்ல. ஏனென்றால் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. ஆனால் ஹெட் செய்தது சரியல்ல. எனக்கு அது பிடிக்கவே இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
டீம் இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஷமி: 3வது டெஸ்டில் ஜொலிக்கப்போவது யார்?'