IND vs ENG 2nd ODI: அறிமுக போட்டியிலேயே புதிய சாதனை படைத்த வருண் சக்கரவர்த்தி!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் மூலம் ஓடிஐயில் அறிமுகமான இந்திய வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார்.

IND vs ENG 2nd ODI: அறிமுக போட்டியிலேயே புதிய சாதனை படைத்த வருண் சக்கரவர்த்தி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அற்புதமான பந்துவீச்சு மூலம் அசத்திய இந்திய அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். கட்டாக்கில் உள்ள பரபதி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் மூலம் ஓடிஐயில் அறிமுகமானார். அவர் இந்திய அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்து அறிமுக தொப்பியைப் பெற்றுக்கொண்டார்.
வருண் சக்கரவர்த்தி
தான் அறிமுகம் கண்ட முதல் ஒருநாள் போட்டியிலேயே வருண் சக்கரவர்த்தி புதிய சாதனை ஒன்று படைத்துள்ளார். அதாவது அதிக வயதில் இந்தியாவுக்காக ஓடிஐ போட்டிகளில் அறிமுகமான 2வது வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். வருண் சக்கரவர்த்தி 33 வயது 164 நாட்களில் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி இருக்கிறார். 1974ம் ஆண்டில் இந்திய வீரர் ஃபரூக் இன்ஜினியர் 36 வயது 138 நாட்களில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தார். இப்போது வருண் சக்கரவர்த்தி இதில் 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பென் டக்கெட், ஜோ ரூட் அதிரடி; இங்கிலாந்து 304 ரன்கள் குவிப்பு; இந்தியா தொடரை வெல்லுமா?
வருண் சக்கரவர்த்தி அறிமுக போட்டி
அதிக வயதில் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான முதல் 5 வீரர்கள்
1. ஃபரூக் இன்ஜினியர் – 36 வயது, 138 நாட்கள் (1974, vs இங்கிலாந்து)
2. வருண் சக்கரவர்த்தி – 33 வயது, 164 நாட்கள் (2024, vs இங்கிலாந்து)
3. அஜித் வாடேகர் – 33 வயது 108 நாட்கள் (1974, vs இங்கிலாந்து)
4. திலீப் தோஷி – 32 வயது, 350 நாட்கள் (1980, vs ஆஸ்திரேலியா)
5. சையத் அபித் அலி – 32 வயது, 307 நாட்கள் (1974, vs இங்கிலாந்து)
வருண் சக்கரவர்த்தி ஓடிஐ
சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வருண் சக்கரவர்த்தி ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்திய அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. இப்போது வரை சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெறவில்லை. ஆனால் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே அறிமுக ஓடிஐ போட்டியில் வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
SA20: தென்னாப்பிரிக்காவிலும் MI ஆதிக்கம்; கோப்பையை தட்டித்தூக்கிய MI கேப் டவுன்!