'ஐபிஎல் 2025' போட்டிகளின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எப்படி டிக்கெட் முன்பதிவு செய்வது?
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22 முதல் தொடங்க உள்ள நிலையில், போட்டிகளின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எப்படி டிக்கெட் முன்பதிவு செய்வது? என்பது குறித்து பார்க்கலாம்,

ஐபிஎல் 2025 போட்டிகளின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எப்படி டிக்கெட் முன்பதிவு செய்வது?
இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'ஐபிஎல் 2025' சீசன் மார்ச் 22ம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 அன்று தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இதனால் ஐபிஎல் போட்டிகளின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு? போன்ற விஷயங்கள் பரவலாக பேச ஆரம்பித்துள்ளன. ஐபிஎல் டிக்கெடுகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்னும் அதிகாரப்பூர்வ முன்பதிவு வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை என்றாலும், முந்தைய சீசன்கள் டிக்கெட்டுகள் முதன்மையாக ஆன்லைனில் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றன.
ஐபிஎல் 2025
கிரிக்கெட் ரசிகர்கள் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அதிகாரப்பூர்வ அணி வலைத்தளங்கள் மற்றும் BookMyShow, Paytm மற்றும் Zomato Insider போன்ற அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் வழியாக ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்க முடியும். மேலும் மைதான கவுண்ட்டர்களில் நேரடியாக சென்றும் டிக்கெட் வாங்கலாம். ஐபிஎல் 2025 ஆன்லைன் டிக்கெட் விற்பனை பிப்ரவரி இறுதிக்கும், மார்ச் தொடக்கத்திற்கும் இடையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, பல உரிமையாளர்கள் ஏற்கனவே தங்கள் போட்டிகளுக்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, ராஜஸ்தான் ராயல்ஸின் ரசிகர்கள் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 20 வரை முன்பதிவு செய்து, பொது விற்பனை தொடங்குவதற்கு முன் முன்கூட்டியே அணுகலைப் பெறலாம். ஐபிஎல் டிக்கெட் கட்டணம் போட்டி நடைபெறும் மைதானம், போட்டியின் முக்கியத்துவம் மற்றும் இருக்கை ஏற்பாட்டைப் பொறுத்து மாறுபடும்.
சாம்பியன்ஸ் டிராபியில் மறக்க முடியாத 5 போட்டிகள்! அனல் பறந்த இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்!
ஐபிஎல் டிக்கெட் கட்டணம்
2025 ஐபிஎல் சீசன் டிக்கெட்டுகள் கீழ்க்காணும் இந்த விலையில் இருக்கலாம்:-
பொது இருக்கைகள் (General Seats): தோராயமாக ரூ.800 – ரூ.1,500
பிரீமியம் இருக்கைகள் (Premium Seats) : ரூ.2,000 – ரூ.5,000
VIP மற்றும் நிர்வாக கேலரி பகுதிகள் (VIP and Executive Boxes): ரூ.6,000 – ரூ.20,000
கார்ப்பரேட் பகுதிகள் (Corporate Boxes): ரூ.25,000 – ரூ.50,000
ஒவ்வொரு அணியின் சொந்த மைதானமும் அதன் சொந்த விலை நிர்ணய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. உதாரணமாக, எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் (சென்னை சூப்பர் கிங்ஸ் ஹோம்) மற்றும் ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியம் (கேகேஆரின் ஹோம்) போன்ற இடங்களில் டிக்கெட் விலைகள் வேறுபடுகின்றன. இங்கு பொது கேலரி இருக்கைகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. அதே வேளையில் பிரீமியம் கேலரி இருக்கைகள் அதிக விலை கொண்டவை.
ஐபிஎல் டிக்கெட் முன்பதிவு
ஐபிஎல் டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது?
* அதிகாரப்பூர்வ ஐபிஎல் டிக்கெட் வலைத்தளம் அல்லது உங்களுக்குப் பிடித்த அணியின் தளத்தைப் பார்வையிடவும்.
* உங்கள் பெயரில் கணக்கில் உருவாக்கவும் அல்லது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அக்கவுண்ட் மூலம் உள்நுழையவும்.
* நீங்கள் கலந்து கொள்ள விரும்பும் போட்டியைத் தேர்வுசெய்யவும்.
* உங்களுக்கு விருப்பமான இருக்கை வகையைத் தேர்ந்தெடுத்து டிக்கெட் கிடைக்கும் தன்மையைச் சரிபார்க்கவும்.
* பணம் செலுத்தும் செயல்முறையை முடித்து, மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் உங்கள் உறுதிப்படுத்தலைப் பெறுங்கள்.
அதிக தேவை உள்ள போட்டிகளுக்கு விரைவாக டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிடும் என்பதால் அதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்தால் டிக்கெட் ஈஸியாக கிடைக்கும்.
ஐபிஎல் 2025 அட்டவணை வெளியீடு: சிஎஸ்கே விளையாடும் போட்டிகளின் முழு லிஸ்ட் இதோ!