ஐபிஎல் 2025 சீசன் தொடருக்கான முழு அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளின் முழு அட்டவணையை பார்க்கலாம்.
ஐபிஎல் 2025 அட்டவணை வெளியீடு
இந்தியாவில் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் சிக்சர்கள் மழை, அடுத்தடுத்து விக்கெட் என பரபரப்பாக செல்வதால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடர்களை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் மார்ச் 22 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 23ம் தேதி பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இறுதிப்போட்டி எப்போது?
வரும் ஐபிஎல் சீசனில் மே 18ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்க உள்ளது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி குவாலிபயர் முதல் போட்டி நடக்கிறது. மே 21ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடக்கிறது. மே 23ம் தேதி குவாலிபயர் 2ம் போட்டி நடக்கிறது. மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகளின் அட்டவணை:
மார்ச் 23 (ஞாயிறு) சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் போட்டி நடக்கும் இடம்: சென்னை
மார்ச் 28 (வெள்ளிக்கிழமை) சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம்: சென்னை
மார்ச் 30 (ஞாயிறு) சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் இடம்: கவுகாத்தி
ஏப்ரல் 5 (சனிக்கிழமை) சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ் இடம்: சென்னையில்
ஏப்ரல் 8 (செவ்வாய்க்கிழமை) சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் இடம்: முல்லன்பூர்
ஏப்ரல் 11 (வெள்ளிக்கிழமை) சிஎஸ்கே vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடம்: சென்னை
ஏப்ரல் 14 (திங்கள்) சிஎஸ்கே vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடம்: லக்னோ
ஏப்ரல் 20 (ஞாயிறு) சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் (MI) இடம்: மும்பை
ஏப்ரல் 25 (வெள்ளிக்கிழமை) சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடம்: சென்னை
ஏப்ரல் 30 (புதன்கிழமை) சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் (PBKS) இடம்: சென்னை
மே 3 (சனிக்கிழமை) சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம்: பெங்களூரு
மே 7 (புதன்கிழமை) சிஎஸ்கே vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) இடம்: கொல்கத்தா
மே 12 (திங்கள்கிழமை) சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) இடம்: சென்னை
மே 18 (ஞாயிற்றுக்கிழமை) சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) இடம்: அகமதாபாத்
