'இதெல்லாம் பெரிய விஷயமா?' தோனி சாதனையை ஓவர்டேக் செய்தது குறித்து தினேஷ் கார்த்திக்!
தோனி சாதனையை ஓவர்டேக் செய்தது குறித்து தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்க அனுமஅதி அளிக்ககூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

'இதெல்லாம் பெரிய விஷயமா?' தோனி சாதனையை ஓவர்டேக் செய்தது குறித்து தினேஷ் கார்த்திக்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக், அண்மையில் தென்னாப்பிரிக்க தொடரில் நடந்த SA20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவின் முதன்மையான T20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த தொடரில் 11 போட்டிகளில் எட்டு முறை பேட்டிங் செய்த அவர் 121.49 ஸ்ட்ரைக்-ரேட்டில் 130 ரன்கள் எடுத்தார். மேலும் சில போட்டிகளில் வர்ணனையாளராகவும் இருந்தார். தினேஷ் கார்த்திக் SA20 லீக்கில் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சாதனையை தகர்த்தெறிந்தார். அதாவது அனைத்து வகையிலான டி20 போட்டிகளையும் சேர்த்து 7,537 ரன்கள் அடித்த அவர் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெயரை பெற்றுள்ளர்.
தினேஷ் கார்த்திக்
மகேந்திர சிங் தோனி 7,432 நன்கள் அடித்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக் தோனியை விட 105 ரன்கள் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். தோனியின் சாதனையை ஓவர்டேக் செய்தது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, ''இந்தியாவுக்காக விளையாடியதிலும், சிறப்பாக செயல்படுவதிலும் முக்கியமானதாக கருதுகிறேன்.
நான் ஒருபோதும் சாதனைக்காக விளையாடியதில்லை. இருந்தாலும் தோனியை முந்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவர் என்னை முந்திச் செல்வதற்கு நீண்ட காலம் ஆகாது. எனக்கு அது பெரிய விஷயமாகும் இருக்காது'' என்றார்.
ஐபிஎல் 2025 முழு அட்டவணை! சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் போட்டிகளின் முழு லிஸ்ட்!
தினேஷ் கார்த்திக்-தோனி
தொடர்ந்து ஐபிஎல் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், ''ஐபிஎல் பிசிசிஐக்கு மகுடமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், மேலும் அது தற்போது உலக கிரிக்கெட்டிலும் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஐபிஎல் தற்போதைய நிலையைத் தக்க வைத்துக் கொள்ள, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறாவிட்டால் அவர்களை வெளிநாட்டு லீக்குகளில் அனுமதிக்கக்கூடாது என்ற பிசிசிஐ கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்திய வீரர்கள் ஓய்வு பெற்றவுடன் வெளிநாட்டு லீக்குகளில் விளையாடலாம்'' என்று தெரிவித்தார்.
தினேஷ் கார்த்திக் சாதனை
மேலும் SA20 லீக்கில் விளையாடியது குறித்து கருத்து தெரிவித்த தினேஷ் கார்த்திக், ''இதில் விளையாடியது சிறப்பான அனுபவமாக இருந்தது. SA20லீக் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டை மேம்படுத்தி வருகிறது. இந்த தொடரில் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. உதாரணத்துக்கு MI கேப் டவுன் இரண்டு வெளிநாட்டினருடன் மட்டுமே விளையாடியது. இதில் ஒன்பது பேர் உள்ளூர் விரர்கள்.
இது உள்நாட்டு வீரர்களின் அடிப்படையில் அணியின் வலிமையையும் அவர்கள் அவர்களை எவ்வளவு நம்புகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. இது மிகவும் ஆரோக்கியமான அறிகுறியாகும். மற்ற பல லீக்குகளில் உள்நாட்டு வீரர்களை விட அதிகமான வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இதில் SA20 தனித்து நிற்கிறது'' என்று கூறினார்.தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 94 ஒருநாள், 60 டி20, 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,500க்கும் மேற்பட ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2025' போட்டிகளின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எப்படி டிக்கெட் முன்பதிவு செய்வது?