- Home
- Sports
- Sports Cricket
- டெஸ்ட் மரபுகளை உடைக்கும் கவுகாத்தி.. முதன் முறையாக லன்ச்சுக்கு முன்னால் டீ டைம்! ஏன் தெரியுமா?
டெஸ்ட் மரபுகளை உடைக்கும் கவுகாத்தி.. முதன் முறையாக லன்ச்சுக்கு முன்னால் டீ டைம்! ஏன் தெரியுமா?
IND vs SA 2025: கவுகாத்தியில் நடக்கும் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக லன்ச்சுக்கு முன்னால் டீ டைம் விடபப்படுகிறது. மேலும் செஷன் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களை விரிவாக பார்க்கலாம்.

டெஸ்ட் மரபுகளை மாற்றும் கவுகாத்தி
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் (IND vs SA 2nd Test) போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் வழக்கமாக காலை 9.30 மணிக்கு தொடங்கும் நிலையில், கவுகாத்தியில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் அரை மணி நேரத்துக்கு முன்னதாக அதாவது காலை 9 மணிக்கே தொடங்கும்.
லன்ச்சுக்கு முன்னால் டீ டைம்
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியாவில் நடந்தாலும் சரி, வெளிநாடுகளில் நடந்தாலும் சரி ஆட்டம் தொடங்கிய ஒன்றரை மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து உணவு இடைவேளை (Lunch Break) விடப்படும். பின்பு அன்றைய நாள் முடியும் இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக தேநீர் இடைவேளை (Tea Break) விடப்படும். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை காலை 11.30 மணி முதல் மதியம் 12.10 மணி வரை உணவு இடைவேளை விடுவது வழக்கம். மாலையில் தேநீர் இடைவேளை இருக்கும்.
லன்ட் டைம், டீ டைம் என்ன?
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கவுகாத்தி டெஸ்ட்டில் முதலில் தேநீர் இடைவேளையும் (Tea Break), அதன்பிறகு மதிய உணவு இடைவேளையும் (Lunch Break) விடப்பட உள்ளது. அதாவது காலை 11:00 மணி முதல் காலை 11:20 மணி வரை தேநீர் இடைவேளையும், பிற்பகல் 1:20 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மதிய உணவு இடைவேளை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றத்துக்கு இதுதான் காரணம்
இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் மற்ற பகுதிகளை விட சீக்கிரம் சூரியன் மறையும். இதேபோல் வட கிழக்கு பகுதியில் உள்ள அசாமிலும் மாலை 5 மணிக்குள் சூரியன் மறைந்து விடும்.
இதனால் தான் கவுகாத்தியில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டி காலை 9 மணிக்கே தொடங்குகிறது. மாலை 4 மணிக்கே ஆட்டம் முடிவடைகிறது. இதன் காரணமாகத்தான் போட்டியின் செஷன்களும், டீ மற்றும் லன்ச் டைமும் மாற்றியமைக்கபட்டுள்ளன.
கவுகாத்தி டெஸ்டிற்கான திருத்தப்பட்ட செஷன் நேரங்கள் பின்வருமாறு:
First session: காலை 9:00 மணி முதல் காலை 11:00 மணி வரை
Tea Break: காலை 11:00 மணி முதல் காலை 11:20 மணி வரை
Second session: காலை 11:20 மணி முதல் பிற்பகல் 1:20 மணி வரை
Lunch break: பிற்பகல் 1:20 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை
Final session பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

