- Home
- Sports
- Sports Cricket
- அய்யய்யோ.. மறுபடியும் டர்னிங் டிராக்கா? குலை நடுங்கும் பேட்ஸ்மேன்கள்.. 2வது டெஸ்ட் பிட்ச் ரிப்போர்ட்
அய்யய்யோ.. மறுபடியும் டர்னிங் டிராக்கா? குலை நடுங்கும் பேட்ஸ்மேன்கள்.. 2வது டெஸ்ட் பிட்ச் ரிப்போர்ட்
IND vs SA 2nd Test Guwahati Pitch Report: கவுகாத்தியில் 22ம் தேதி தொடங்க உள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய அணி படுதோல்வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. போட்டி நடந்த கொல்கத்தாவின் ஈடன் கார்டன் பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பினுக்கு உகந்ததாக இருந்தது. அதாவது 2வது நாளில் இருந்தே பந்து சுழன்று திரும்பியதாலும், கணிக்க முடியாதபடி எகிறியதாலும் இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் ரன்கள் அடிக்க சிரமப்பட்டனர்.
2வது டெஸ்ட் பிட்ச் எப்படி?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் இந்த டர்னிங் டிராக் பிட்ச்சை அமைக்க சொன்னதாக தெரிவித்தார். இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பர்சபரா பிட்ச் ரிப்போர்ட் குறித்து விரிவாக பார்க்கலாம். கொல்கத்தாவில் கருப்பு களிமண்ணால் செய்யப்பட்ட பிட்ச் இருந்த நிலையில், கவுகாத்தியில் சிவப்பு களிமண் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
சீரான வேகம் மற்றும் பவுன்ஸ்
சிறிதளவு புல் இருந்தாலும், போட்டிக்கு முந்தைய நாள் அது வெட்டப்பட வாய்ப்புள்ளது. இதனால், பிட்ச் மேலும் வறண்டு, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு மண்ணால் செய்யப்பட்ட பிட்ச்களை விட சிவப்பு மண் பிட்ச்கள் வேகமாக வறண்டுவிடும். ஆனால் முதல் நாட்களில் கணிக்க முடியாத பவுன்ஸை எதிர்பார்க்க முடியாது. சீரான வேகம் மற்றும் பவுன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்
முதல் நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பவுன்ஸ் கிடைத்தாலும், ஆட்டம் செல்லச் செல்ல பிட்ச் வறண்டு வெடிக்க வாய்ப்புள்ளது. மூன்றாவது நாளிலிருந்து, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல திருப்பமும், கணிக்க முடியாத பவுன்ஸும் கிடைக்க வாய்ப்புள்ளது.
முதல் நாளிலிருந்தே பந்து திரும்பும் பிட்ச் வேண்டாம் என பிசிசிஐ, கவுகாத்தி பிட்ச் கியூரேட்டர் ஆஷிஷ்க்கு அறிவுறுத்தியுள்ளது. பேட்டிங் எளிதாக இருக்காது என்றாலும், டாஸ் வெல்பவர்கள் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யவே வாய்ப்புள்ளது.
பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க சிரமம்
சிவப்பு மண் பிட்ச்சில் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். முதல் டெஸ்ட் இரண்டரை நாட்களில் முடிந்ததால், போட்டி குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது நீடிக்க வேண்டும் என கவுகாத்தி கியூரேட்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிவப்பு மண் பிட்ச்கள் வறண்டு போகும்போது வெடிக்க வாய்ப்பு அதிகம் என்பதால் முதல் டெஸ்ட்டை போல் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க சிரமப்படுவார்கள்.

