- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 2வது டெஸ்ட்டில் சுப்மன் கில் விளையாடுவாரா? பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்!
IND vs SA 2வது டெஸ்ட்டில் சுப்மன் கில் விளையாடுவாரா? பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்!
Shubman Gill Injury Update for 2nd Test vs South Africa: கழுத்தில் காயம் அடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் விளையாடுவாரா? என்பது குறித்து பிசிசிஐ முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளது.

சுப்மன் கில்லுக்கு காயம்
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்தபோது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஸ்பின் பந்தை ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்தபோது வலியால் துடித்தபடி தனது கழுத்தைப் பிடித்துக்கொண்டார்.
2வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?
இதனால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர் பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் இந்திய அணியால் தொடரை டிரா செய்ய முடியும். முக்கியமான இந்த டெஸ்ட்டில் சுப்மன் கில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ கொடுத்த அப்டேட்
இந்த நிலையில், சும்பன் கில்லின் உடல்நிலை குறித்து பிசிசிஐ முக்கிய அப்டேட் ஒன்று கூறியுள்ளது. ''முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் கழுத்தில் காயம் அடைந்தார். ஆட்டம் முடிந்ததும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு சுப்மன் நன்றாக ஒத்துழைத்து வருகிறார்.
நவம்பர் 19 (அதாவது இன்று) அணியுடன் கவுகாத்திக்கு பயணம் செய்வார். பிசிசிஐ மருத்துவக் குழுவால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். சுப்மன் கில் 2 வது டெஸ்டில் அவர் பங்கேற்பது குறித்து அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும்'' என்று பிசிசிஐ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளது.
கில் இல்லையென்றால் கேப்டன் யார்?
பிசிசிஐ கொடுத்த அப்டேட்டை பார்த்தோம் என்றால் 2வது டெஸ்ட்டில் சுப்மன் கில் விளையாடுவாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை கில் 2வது டெஸ்ட்டில் விளையாடாமல் போனால் ரிஷப் பண்ட் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார். அதே வேளையில் டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இதில் சுப்மன் கில் கேப்டனாக தொடர்வார் என தகவல்கள் கூறுகின்றன.

