- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 2nd Test: இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்! ஆல்ரவுண்டருக்கு ஜாக்பாட்! பிளேயிங் லெவன்!
IND vs SA 2nd Test: இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்! ஆல்ரவுண்டருக்கு ஜாக்பாட்! பிளேயிங் லெவன்!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறது. 1 0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் தொடரை டிரா செய்ய முடியும்.
சுப்மன் கில் விளையாட மாட்டார்
முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்தில் தசைப்பிடிப்பால் விலகிய இந்திய கேப்டன் சுப்மன் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி பிசிசிஐ மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். மேலும் இதுவரை சுப்மன் கில் பயிற்சியை தொடங்கவில்லை என்பதால் அவர் 2வது டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் ரிஷப் பண்ட் கேப்டானாக இருப்பார்.
இந்திய அணியில் 2 மாற்றங்கள்
சுப்மன் கில் விளையாடாததால் இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழக வீரர் சாய் சுதர்சன் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். மேலும் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு பாதிலாக பாஸ்ட் பவிலிங் ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கூடுதலாக ஒரு பாஸ்ட் பவுலர்
ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் ஓப்பனிங்கில் களமிறங்குவார்கள். ஒன் டவுனில் சாய் சுதர்சன் விளையாட இருப்பதால் வாஷிங்டன் சுந்தர் பின்னுக்கு தள்ளப்படலாம். நிதிஷ்குமார் ரெட்டி வந்துள்ளதால் பும்ரா, சிராஜூடன் கூடுதலாக ஒரு பாஸ்ட் பவுலர் கிடைத்துள்ளார். ஜடேஜா, குல்தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என 3 ஸ்பின்னர்கள் உள்ளதால் சரியான கலவையில் அணி அமைந்துள்ளது.
இந்திய அணி பிளேயிங் லெவன்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரிஷப் பண்ட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், நிதிஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

