- Home
- Sports
- Sports Cricket
- Suryakumar Yadav: வின்னிங் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீக்கம் ஏன்? கம்பீருடன் மோதல்? பரபரப்பு தகவல்!
Suryakumar Yadav: வின்னிங் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீக்கம் ஏன்? கம்பீருடன் மோதல்? பரபரப்பு தகவல்!
Suryakumar Yadav: டி20 உலகக்கோப்பை வின்னிங் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இங்கிலாந்து, அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான T20I தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூன் 6) அறிவித்தது. இந்தத் தொடர்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், திலக் வர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் கலக்கி உலகையே திரும்பி பார்க்க வைத்த 15 வயதான இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி அனைவரும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகிறார்
இந்தியாவின் டாப் ஆர்டரில் அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் என அதிரடி பேட்டிங் பட்டாளம் உள்ளது. மிடில் ஆர்டரில் நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிக் ஹிட்டர் சிவம் துபே ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை, வாஷிங்டன் சுந்தருடன் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் என மூன்று ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சு யூனிட்டில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் உள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்தே நீக்கம்
ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த இரண்டு தொடர்களிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. T20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்த ரிங்கு சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதேபோல் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும்விதமாக T20 உலகக்கோப்பை வின்னிங் கேப்டன் சூர்யகுமார் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமின்றி இந்திய அணியில் இருந்தே தூக்கி வீசப்பட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சூர்யகுமார் நீக்கப்பட்டது ஏன்?
ஏனெனில் சூர்யகுமாருக்கு 35 வயதாகி விட்டதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஷ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ தேர்வு செய்திருக்கலாம். ஆனால் டி20 பார்மட்டில் சிறந்த பேட்ஸ்மேனான சூர்யகுமாரை அணியில் இருந்தே நீக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுந்தது. சமீபகாலமாக சூர்யகுமார் பார்மின்றி தவித்து வருகிறார். ஐபிஎல் தொடரிலும் அவர் சோபிக்கவில்லை. இதன் காரணாமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு சிலரும், பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், சூர்யகுமாருக்கும் மோதல் ஏற்பட்டதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என மற்றொரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித் அகர்கர் விளக்கம்
இந்த நிலையில், மோசமான பேட்டிங் காரணமாகவே சூர்யகுமார் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரேயஸின் கேப்டன்சியை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அவர் பல்வேறு ஃபிரான்சைஸ்களை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.
ஆகவே அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவராக இருந்தார். சூர்யகுமார் யாதவைப் பொறுத்தவரை, அவரை நீக்குவது எளிதாக இருக்கவில்லை. ஆனால் இதற்கு அவரது தற்போதைய ஆட்டத்திறனும் (மோசமான பார்ம்) ஒரு காரணமாக இருந்தது. அடுத்த இரண்டு ஆண்டு கால சுழற்சியையும், அணியின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். இதுவே முன்னேறுவதற்கான சிறந்த வழி என்று நினைத்தோம்'' என்று தெரிவித்துள்ளார்.

