MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • India T20I Squad: இந்திய டி20 அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி! சூர்யகுமார், ஹர்திக் நீக்கம்! அட! புது கேப்டன் இவரா?

India T20I Squad: இந்திய டி20 அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி! சூர்யகுமார், ஹர்திக் நீக்கம்! அட! புது கேப்டன் இவரா?

Vaibhav Sooryavanshi: உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 06 2026, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
புதிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்
Image Credit : Asianet News

புதிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் பட்டையை கிளப்பிய 15 வயதான வைபஸ் சூர்யவன்ஷிக்கு முதல் முறையாக சீனியர் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் நீக்கம்
Image Credit : Asianet News

ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் நீக்கம்

சூர்யகுமார் யாதவ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்தார். கேப்டனாக சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அவரது ஃபார்ம் பெரும் கவலையாக இருந்தது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, எதிர்கால இந்திய அணியைக் கட்டமைக்கும் நோக்கில் மும்பையைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயரிடம் டி20 கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Vaibhav Sooryavanshi: 15 வயதில் கோடிகளில் புரளும் வைபவ்! IPL-க்கு பின் இரட்டிப்பான பிராண்ட் மதிப்பு!
Related image2
சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் இல்ல.. இந்திய அணி கேப்டனாகும் RCB சிக்சர் மன்னன்? முன்னாள் வீரர் கணிப்பு!
36
புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்
Image Credit : Getty

புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தியுள்ளார். கடந்த சீசனுக்கு முந்தைய சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். ஆனால், 19வது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது.

46
திலக் வர்மாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு
Image Credit : Getty

திலக் வர்மாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு

இளம் வீரரான திலக் வர்மா, சமீப காலமாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் காரணமாக, அவருக்குத் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கைக்குரிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திலக் வர்மா ஜொலித்து வருகிறார்.

56
வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜாக்பாட்
Image Credit : IPL MEDIA

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜாக்பாட்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற வைபவ் சூர்யவன்ஷி முதல் முறையாக இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்துள்ளார். ஒருவேளை, அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக விளையாடிய மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார். இவரைப் போலவே, ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பிரின்ஸ் யாதவிற்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

66
இந்திய அணி
Image Credit : Asianet News

இந்திய அணி

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்தியா
விளையாட்டு
Latest Videos
Recommended Stories
Recommended image1
KS Bharat Retirement: இந்திய அணியில் இனி இடமில்லை; 32 வயதில் திடீர் ஓய்வை அறிவித்த விக்கெட் கீப்பர்!
Recommended image2
சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் இல்ல.. இந்திய அணி கேப்டனாகும் RCB சிக்சர் மன்னன்? முன்னாள் வீரர் கணிப்பு!
Recommended image3
Rohit Sharma: ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்! விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் விலகலா? புதிய தகவல்!
Related Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: 15 வயதில் கோடிகளில் புரளும் வைபவ்! IPL-க்கு பின் இரட்டிப்பான பிராண்ட் மதிப்பு!
Recommended image2
சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் இல்ல.. இந்திய அணி கேப்டனாகும் RCB சிக்சர் மன்னன்? முன்னாள் வீரர் கணிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved