ZIM vs IND: 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! என்னென்ன மாற்றங்கள்..?
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. நேற்று(18ம் தேதி) நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
190 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கில் - தவான் ஆகிய இருவரும் இணைந்தே அடித்துவிட்டனர். இதையடுத்து விக்கெட் இழப்பின்றி இலக்கை அடித்த இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க - தேசிய கீதத்திற்கு முன் கேஎல் ராகுல் செய்த செயல்.! ராகுலை கொண்டாடும் இண்டர்நெட்.. வைரல் வீடியோ
நாளை(20ம் தேதி) நடக்கும் 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 2வது போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. எனவே 2வது போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமில்லை. மாற்றம் செய்யப்படவும் மாட்டாது.
இதையும் படிங்க - கங்குலியின் விலா எலும்பை உடைக்க சொல்லி டீம் மீட்டிங்கில் சொன்னாங்க.. நானும் உடைத்தேன் - அக்தர் ஃப்ளாஷ்பேக்
இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:
ஷிகர் தவான், ஷுப்மன் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.