தேசிய கீதத்திற்கு முன் கேஎல் ராகுல் செய்த செயல்.! ராகுலை கொண்டாடும் இண்டர்நெட்.. வைரல் வீடியோ
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படும்போது, இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் சூயிங் கம்மை வாயிலிருந்து வெளியே எடுத்து தேசிய கீதத்திற்கு மதிப்பளித்த செயல், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. வரும் 27ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடரில் கலந்துகொள்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி வரும் 24ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறது.
இதற்கிடையே ஆகஸ்ட் 22ம் தேதி வரை இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இருப்பதால், அதில் கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்துகொண்டு ஆடிவருகிறது.
முதல் ஒருநாள் போட்டி நேற்று(18ம் தேதி) முடிந்தது. 2 மற்றும் 3 வது ஒருநாள் போட்டிகள் முறையே வரும் 20 மற்றும் 22ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஆரம்பத்தில் ஷிகர் தவான் தான் அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம்..? மௌனம் கலைத்த கேப்டன் ரோஹித் சர்மா
ஆனால் காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸை அடைந்ததால் இந்த தொடருக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் இணைந்தபிறகு, ராகுலே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ராகுலின் கேப்டன்சியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹராரேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 190 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கில் - தவான் ஆகிய இருவரும் இணைந்தே அடித்துவிட்டனர். இதையடுத்து விக்கெட் இழப்பின்றி இலக்கை அடித்த இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க - 3 & 4வது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியாவிற்கு கடினமான போட்டிகள்..! முழு போட்டி பட்டியல்
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான இந்த முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்படும் முன், அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக வாயில் இருந்த சூயிங் கம்மை கையில் எடுத்தார் கேப்டன் கேஎல் ராகுல். கேஎல் ராகுல் வாயிலேயே சமாளித்து கூட வைத்திருந்திருக்கலாம். ஆனால் தேசிய கீதத்திற்கு, சும்மா பெயரளவில் இல்லாமல், ஆழ்மனதிலிருந்து உண்மையாக மரியாதை அளிக்கும் விதமாக சூயிங் கம்மை கையில் எடுத்தார் ராகுல்.
ராகுலின் இந்த செயல், ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள், ராகுலை புகழ்ந்தும் கொண்டாடியும் வருகின்றனர்.