கங்குலியின் விலா எலும்பை உடைக்க சொல்லி டீம் மீட்டிங்கில் சொன்னாங்க.. நானும் உடைத்தேன் - அக்தர் ஃப்ளாஷ்பேக்
சௌரவ் கங்குலியின் இடுப்பை உடைக்க சொல்லி பாகிஸ்தான் டீம் மீட்டிங்கில் கூறியதால், தானும் அதன்படி கங்குலியின் இடுப்பை உடைத்ததாக ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களில் முன்னியில் இருப்பவர் ஷோயப் அக்தர். தரமான பல ஃபாஸ்ட் பவுலர்களை கொடுத்த பாகிஸ்தான் தான், அக்தரையும் கொடுத்தது.
1997ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணிக்காக ஆடிய அக்தர், அதே காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், பிரயன் லாரா, ஜெயசூரியா, ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி ஆகிய பல தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தனது அதிவேக பந்துவீச்சால் மிரட்டியவர்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம்..? மௌனம் கலைத்த கேப்டன் ரோஹித் சர்மா
பல சிறந்த பேட்ஸ்மேன்களை வேண்டுமென்றே அவர்களது தலை மற்றும் உடல் பகுதிகளை குறிவைத்து தாக்கியவர் அக்தர். அவரது வேகம் தான் அவரது பலமும் கூட. அக்தரின் அதிவேக பவுன்ஸரை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. அந்தவகையில், சச்சின் டெண்டுல்கரின் தலையை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கும் நோக்கில் பந்துவீசிய சம்பவத்தை ஏற்கனவே பகிர்ந்துள்ளார் அக்தர்.
அந்தவரிசையில், கங்குலியின் இடுப்பை உடைக்க பாகிஸ்தான் அணி டீம் மீட்டிங்கில் திட்டம் தீட்டியதாகவும், தான் அதை செயல்படுத்தியதாகவும் அக்தர் கூறியுள்ளார். 1999ல் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு முந்தைய பாகிஸ்தான் அணி டீம் மீட்டிங்கில் பேசப்பட்டவிஷயம் குறித்து சேவாக்குடனான ஃப்ரெனெமிஸ் என்ற உரையாடலில் அக்தர் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அக்தர், நான் பொதுவாகவே பேட்ஸ்மேனின் தலை, இடுப்புக்குத்தான் குறிவைப்பேன். ஆனால் கங்குலியின் இடுப்பை தாக்கும்படி அணி மீட்டிங்கில் என்னிடம் கூறினார்கள். நான் அவரை அவுட்டாக்க தேவையில்லையா என்று கேட்டேன். நீ நல்ல வேகத்தில் வீசி பேட்ஸ்மேன்களை தாக்குவதை மட்டும் செய். அவுட்டாக்குவதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். நானும் அதையே செய்தேன். ஆனால் இந்த விஷயத்தை பின்னாளில் கங்குலியிடம் கூறிவிட்டேன் என்றார் அக்தர்.
இதையும் படிங்க - தேசிய கீதத்திற்கு முன் கேஎல் ராகுல் செய்த செயல்.! ராகுலை கொண்டாடும் இண்டர்நெட்.. வைரல் வீடியோ
அதன்பின்னர் கங்குலியின் கேப்டன்சியில் ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் அக்தர் ஆடினார். அப்போது இருவருக்கு இடையேயும் நல்ல நட்பும் உறவும் மலர்ந்தது.