இலங்கை தொடருக்கு முன்னதாக குடும்பத்தோடு சுற்றுலா சென்ற ரோகித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் இலங்கை தொடருக்கு முன்னதாக சின்னதாக குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்காக விமான நிலையம் வந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோகித் சர்மா
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா கேப்டன், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் அணியில் இல்லை!
ரோகித் சர்மா
இதில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இழந்தது. வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியிலிருந்தும், டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகினார்.
டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை: டுவிட்டரில் கருத்து பதிவிட்ட ஹர்ஷா போக்ளே!
ரோகித் சர்மா
3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மாவிற்குப் பதிலாக இளம் வீரர் இஷான் கிஷான் விளையாடி 131 பந்துகளில் 10 சிக்சர்கள் 24 பவுண்டரிகள் உள்பட 210 ரன்கள் குவித்து இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா கேப்டன், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் அணியில் இல்லை!
ரோகித் சர்மா
இந்த நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
மெஸ்ஸி அனுப்பிய ஜெர்ஸியை அணிந்து கொண்ட தோனி மகள்: வைரலாகும் புகைப்படம்!
டி20 போட்டிக்கான இந்திய அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் கூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மவி, முகேஷ் குமார்.
ரோகித் சர்மா
டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை: டுவிட்டரில் கருத்து பதிவிட்ட ஹர்ஷா போக்ளே!
ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்
ரோகித் சர்மா
இலங்கை அணி தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷிகர் தவான் சேப்டர் குளோஸா? இலங்கை தொடரில் நீக்கப்பட்டது ஏன்?