- Home
- Sports
- Sports Cricket
- காலில் கொட்டிய ரத்தம்! வலியால் கதறிய ரிஷப் பண்ட்! மைதானத்துக்குள்ளேயே வந்த ஆம்புலன்ஸ்! என்ன நடந்தது?
காலில் கொட்டிய ரத்தம்! வலியால் கதறிய ரிஷப் பண்ட்! மைதானத்துக்குள்ளேயே வந்த ஆம்புலன்ஸ்! என்ன நடந்தது?
4வது டெஸ்ட்டில் காலில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் கோல்ஃப் வண்டி ஆம்புலன்ஸில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

IND vs ENG 4th Test: Rishabh Pant Injured For Ball Hit Leg
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்துள்ளார். அதாவது அவர் 48 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆட முயன்றார். அப்போது புல்லராக போடப்பட்ட அந்த பந்து ரிஷப் பண்ட்டின் வலது காலின் ஷுவுக்கு மேல் நேரடியாக தாக்கியது. இதனால் அவர் வலியால் கதறி துடித்தார். உடனடியாக ஷூவை கழட்டி பார்த்தபோது கால் கடுமையாக வீங்கி இருந்தது.
ஆம்புலன்ஸில் வெளியேறிய ரிஷப் பண்ட்
மேலும் காலில் இருந்து ரத்தமும் கொட்டியது. இதனால் ரிஷப் பண்ட் வலியால் அலறி துடித்தார். உடனடியாக இந்திய அணியின் பிசியோ வந்து பார்த்தனார். ஆனாலும் வலியால் துடித்த ரிஷப் பண்ட்டால் காலை தரையில் வைக்க முடியவில்லை. அவரால் நடக்க முடியாத நிலையில், கோல்ஃப் வண்டி 'ஆம்புலன்ஸ்' மைதானத்துக்குள் கொண்டு வரப்பட்டு அதன்மூலம் ரிஷப் பண்ட் அழைத்து செல்லப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக ஜடேஜா களமிறங்கினார்.
ரிஷப் பண்ட் காலில் கடுமையான காயம்
ரிஷப் பண்ட்டுக்கு கடுமையான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் அவரால் களத்தில் காலை ஊன்ற கூட முடியவில்லை. ஆகையால் இந்த டெஸ்ட்டில் பண்ட் இனிமேல் மீண்டும் பேட்டிங் செய்வது சந்தேகம் தான். அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக களமிறங்கக் கூடும். பண்ட்டின் கால் பரிசோதனை செய்த பிறகே அவர் காயத்தின் தன்மை எந்த அளவுக்கு உள்ளது? அவரால் இனிமேல் பேட்டிங் செய்ய முடியுமா? என்பது தெரியவரும்.
இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு
ஏற்கெனவே 3வது டெஸ்ட்டில் விக்கெட் கீப்பிங் செய்தபோது முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் பந்து தாக்கி விரலில் காயம் அடைந்தார். இதனால் அவர் பேட்டிங் மட்டும் தான் செய்தார். விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இந்த நிலையில் ரிஷப் பண்ட் மீண்டும் காயம் அடைந்து வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
4வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி இப்போது வரை 4 விக்கெட் இழந்து 243 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 58 ரன்) அரை சதம் அடித்தார். சாய் சுதர்சன் முதல் முதல் டெஸட் அரை சதம் (61 ரன்) விளாசி அவுட் ஆனார்.