- Home
- Sports
- Sports Cricket
- ரிஷப் பண்ட் 4வது டெஸ்ட்டில் ஏன் முக்கியம்? பேட்டிங் மட்டும் செய்வாரா? முக்கிய அப்டேட்!
ரிஷப் பண்ட் 4வது டெஸ்ட்டில் ஏன் முக்கியம்? பேட்டிங் மட்டும் செய்வாரா? முக்கிய அப்டேட்!
4வது டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? பேட்டிங் மட்டுமாவது செய்வாரா? என்பது குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Why is Rishabh Pant important in the 4th Test?
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
லார்ட்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23 ஆம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இங்கிலாந்தில் ரிஷப் பண்ட்டின் சாதனை
இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? இல்லையா? அப்படி விளையாடினால் கீப்பிங் செய்வாரா? இல்லை பேட்டிங் மட்டும் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் 3வது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. பேட்டிங் மட்டும் தான் செய்தார்.
தற்போதைய டெஸ்ட் தொடரில், ரிஷப் பண்ட் ஏற்கனவே 425 ரன்கள் குவித்துள்ளார். அது மட்டுமின்றி இங்கிலாந்தில் 12 டெஸ்ட்களில் சராசரியாக 42க்கு மேல் சராசரி எடுத்துள்ளார்.
ரிஷப் பண்ட் ஏன் முக்கியம்?
மிகவும் கடினமான பேட்டிங் டிராக்குகளில் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். ஆகையால் பண்ட் கீப்பிங் மட்டும் செய்யாமல் ஒரு பேட்டராக விளையாட அதிக வாய்ப்பிருக்கிறது. இது மட்டுமின்றி இந்தியாவின் பேட்டிங்கில் கே.எல். ராகுல், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி போன்ற தொழில்நுட்ப வீரர்கள் நிறைந்துள்ளனர்.
இவர்கள் அதிரடி வீரர்கள் அல்ல. பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால் மட்டுமே அதிரடியாக ஆடக்க்கூடியவர்கள். இதில் ஜெய்ஸ்வால் பார்ம் ஏற்றம் இறக்கமாக இருக்கும் நிலையில், பண்ட் மட்டுமே தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவிக்கிறார். 30 ஓவர்கள் இருந்தால் ஆட்டத்தையே மாற்றி விடுவார் என்பதால் பண்ட் அணிக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறார்.
கருண் நாயருக்கு பதிலாக துருவ் ஜூரல்
பண்ட்டுக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங்கில் செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. கருண் நாயருக்கு பதிலாக அவர் முழு நேர பேட்டராகவும் விளையாட வாய்ப்பு இருக்கிறது. விராட் கோலி இடத்தில் களமிறங்கும் கருண் நாயர் சிறப்பாக செயல்படவில்லை. அவர் மூன்று டெஸ்ட்களில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆகையால் அந்த இடத்தை துருவ் ஜூரல் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.