- Home
- Sports
- Sports Cricket
- ஆர்சிபி மேட்ச் வின்னிங் பவுலர் மீது போக்சோ வழக்கு! 27 வயதில் முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?
ஆர்சிபி மேட்ச் வின்னிங் பவுலர் மீது போக்சோ வழக்கு! 27 வயதில் முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?
ஆர்சிபி மேட்ச் வின்னிங் பவுலர் யஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

RCB P.layer Yash Dayal Booked Under POCSO Act
ஆர்சிபி அணியின் மேட்ச் வின்னர் பவுலர் யஷ் தயாள் மீது ஜெய்ப்பூரில் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025 தொடரின்போது 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கஜியாபாத்தில் இவர் மீது மற்றொரு பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, கிரிக்கெட் மூலம் யஷ் தயாளுடன் அறிமுகமானதாகவும், தொழில்முறை கிரிக்கெட்டில் உதவுவதாகக் கூறி இரண்டு ஆண்டுகளாகப் பாலியல் உறவுக்குத் தன்னை வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
யஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
அந்த சிறுமி 17 வயதுடையவர் என்பதால், இது போக்சோ சட்டத்தின் கீழ் வருகிறது. ஐபிஎல் 2025ல், ஆர்ஆர் vs ஆர்சிபி போட்டியின் போது, ஜெய்ப்பூரில் உள்ள சீதாபூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தன்னைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள சங்கநேர் சதர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் பேரில் ஜூலை 23, 2025 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை
இது சிறுமியின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு எனவும், 2012 போக்சோ சட்டத்தின் கீழ் யஷ் தயாள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் நிலைய அதிகாரி அனில் ஜெய்மன் தெரிவித்தார். யஷ் தயாள் ஏற்கனவே கஜியாபாத்தில் ஒரு பெண்ணின் புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்கை எதிர்கொள்கிறார். யஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார்.
ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளது
முதலமைச்சரின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல், ஐ.ஜி.ஆர்.எஸ் மூலம் அந்தப் பெண் புகார் கூறியிருந்தார். தற்போது ஜெய்ப்பூர் வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் மேலும் வலுவடைந்துள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் யஷ் தயாள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்த வழக்குகள் யஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆர்சிபி மேட்ச் வின்னர்
ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி முதன் முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இந்த ஆர்சிபி அணியில் முக்கிய வீரராக வலம் வந்த யஷ் தயாள் தனது அபார பந்துவீச்சின் மூலம் 15 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். யஷ் தயாள் உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடுகிறார். இந்திய அணிக்காக இன்னும் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.