சர்வதேச கிரிக்கெட்டில் லெஜண்ட் கிரிக்கெட்டர் கபில் தேவின் சாதனையை முறியடித்தார் அஷ்வின்..!
சர்வதேச கிரிக்கெட்டில் லெஜண்ட் கிரிக்கெட்டர் கபில் தேவை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். கபில் தேவ் 4ம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்திய கண்டிஷனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின், எதிர்கொள்ள மிகக்கடினமான பவுலர். ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் சாமர்த்தியமான, புத்திக்கூர்மையான அஷ்வினின் பவுலிங்கை எதிர்கொள்வது எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் கடினமான காரியமே.
இந்திய அணி 2012ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 11 ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்றதில்லை. தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை இந்திய மண்ணில் வென்று சாதனை படைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நடப்பு தொடரை வென்றால் அது 15வது டெஸ்ட் தொடர் வெற்றியாக அமையும். இந்திய அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி தொடர் வெற்றிகளை குவிக்க முக்கியமான காரணம் அஷ்வின் தான்.
IND vs AUS: அரை மணி நேரத்தில் ஆஸி., பேட்டிங் ஆர்டரை பொட்டளம் கட்டிய அஷ்வின், உமேஷ் யாதவ்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 200, 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்குரிய ரவிச்சந்திரன் அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 466 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 151 விக்கெட் மற்றும் டி20யில் 72 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
ஆஸி.,க்கு எதிராக இந்தூரில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்தி, அந்த அணியை 197 ரன்களுக்கு சுருட்ட உதவினார் அஷ்வின். இந்த 3 விக்கெட்டுடன் சேர்த்து டெஸ்ட்டில் மொத்தமாக 466 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட்டில் 466, ஒருநாள் கிரிக்கெட்டில் 151 மற்றும் டி20யில் 72 என மொத்தம் 689 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்த கபில் தேவை(687) 4ம் இடத்திற்கு தள்ளி, 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் அஷ்வின்.
முதுகில் சர்ஜரி.. ஐபிஎல்லில் இருந்து உறுதியாக விலகும் பும்ரா
இந்த பட்டியலில் 953 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்திலும், 707 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் 2ம் இடத்திலும் உள்ளனர்.