- Home
- Sports
- Sports Cricket
- PBKS vs DC: பலம் வாய்ந்த பஞ்சாப்பை வீழ்த்துமா டெல்லி? எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
PBKS vs DC: பலம் வாய்ந்த பஞ்சாப்பை வீழ்த்துமா டெல்லி? எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
ஐபிஎல் போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் இன்று எதிர்கொள்கிறது. இரு அணிகளின் வெற்றி வாய்ப்பு பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

PBKS vs DC, Match 66: Pitch Conditions & Streaming Details
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.
அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் இருக்கும் நிலையில், ஒன்றில் வெற்றி பெற்றாலும் முதல் 2 இடங்களை பிடித்து விடும். டெல்லி அணியை பொறுத்தவரை 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விக்ளுடன் 13 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் மோதல்
ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்ட டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் பஞ்பாப் கிங்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். இதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும். போட்டி நடக்கும் சவாய் மான்சிங் ஸ்டேடியம் பேட்டிங்கிற்கு ஏற்ற டிராக்காகக் காணப்படுகிறது.
அதிக ஸ்கோர் இந்த பிட்ச்சில் எதிர்பார்க்கலாம். பிட்ச் மேற்பரப்பில் நிலையான வேகம் மற்றும் பவுன்ஸ் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நடுத்தர ஓவர்களில் கைகொடுக்கும்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?
இரண்டு அணிகளும் இதுவரை 34 போட்டிகளில் மோதியுள்ளன, பஞ்சாப் கிங்ஸ் 17 வெற்றிகளுடன் லேசான முன்னிலையைப் பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு இல்லாமல் போனது. போட்டி ஜெய்ப்பூரில் இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை.
ஆகவே இந்த போட்டி எந்தவித தடையும் இன்றி நடைபெறும். இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் முதலில் பந்து வீசுவதையே விரும்பு. ஏனெனில் இந்த சீசனில் ஜெய்ப்பூர் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு அதிக உதவியாக இருந்து வருகிறது.
முக்கிய வீரர்கள் யார்? யார்?
கடந்த ஆட்டத்தில், இரு அணிகளும் 200 ரன்களுக்கு மேல் எடுத்தன. எனவே இன்றைய ஆட்டத்திலும் அதிக ஸ்கோர்களை நாம் பார்க்க முடியும். பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரான் சிங். ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும், டெல்லி அணியில் KL ராகுல், ஃபாஃப் டு பிளெசிஸ், அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், முகேஷ் குமார் ஆகியோர் முக்கிய வீரர்களாக உள்ளனர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
பஞ்சாப் கிங்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, மிட்செல் ஓவன், அஸ்மத்துல்லா ஒமர்சாய், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
டெல்லி கேபிடல்ஸ்: அக்சர் படேல் (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், கேஎல் ராகுல், அபிஷேக் போரெல், அக்சர் படேல் (c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீர, முஸ்தாபிசுர் ரஹ்மான், முகேஷ் குமார்.