- Home
- Sports
- Sports Cricket
- நானும் எத்தனையோ பிளேயர்ஸுக்கு பந்துவீசியிருக்கேன்! புஜாரா மாதிரி ஒரு வீரரை பார்த்ததில்ல - நேதன் லயன் புகழாரம்
நானும் எத்தனையோ பிளேயர்ஸுக்கு பந்துவீசியிருக்கேன்! புஜாரா மாதிரி ஒரு வீரரை பார்த்ததில்ல - நேதன் லயன் புகழாரம்
கப்பா (பிரிஸ்பேன்) பவுன்ஸோ, இந்தூர் டர்னோ, எந்தமாதிரியான பிட்ச்சிலும் அபாரமாக ஆடுகிறார் புஜாரா என்று நேதன் லயன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குன்னெமன் சுழலில் சுருண்ட இந்திய அணி, வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் அடிக்க, 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி வீரர்கள் நேதன் லயனின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான நிலையில், புஜாரா மட்டுமே நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 59 ரன்களுக்கு நேதன் லயனின் சுழலில் அவுட்டானார்.
மற்ற எந்த வீரராலும், ஆணி அடித்தாற்போல குட் லெந்த்தில் வீசிய நேதன் லயனின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாத நிலையில், புஜாரா மட்டுமே திறம்பட எதிர்கொண்டு ஆடினார். இந்திய அணியின் நங்கூரமே புஜாரா தான். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான புஜாரா, ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவரது இடத்தை நிரப்பியவர். பேட்டிங் டெக்னிக்கிற்கு அப்பாற்பட்டு அவரது மனவலிமை, பொறுமை, நிதானம் ஆகியவை அபாரமானவை.
இந்நிலையில், புஜாரா குறித்து பேசிய 3வது டெஸ்ட்டின் ஆட்டநாயகனும் சுழல் ஜாம்பவானுமான நேதன் லயன், புஜாரா வேற லெவல் கிரிக்கெட்டர். கப்பா(பிரிஸ்பேன்) பவுன்ஸோ அல்லது பந்து தாறுமாறாக திரும்பும் இந்தியாவோ, எந்தமாதிரியான ஆடுகளங்களாக இருந்தாலும், அசத்தலாக பேட்டிங் ஆடுகிறார் புஜாரா. மிக மிகச்சிறந்த தடுப்பாட்ட உத்தியை கொண்டவர் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே தடுப்பாட்டம் தான். தடுப்பாட்டம் என்றால் புஜாரா தான் என்று நேதன் லயன் தெரிவித்தார்.
பிட்ச்சை விமர்சிக்கும் முன்னாள் வீரர்களை பிரித்து மேய்ந்த ரோஹித் சர்மா