ஸ்டீவ் ஸ்மித் கிரேட் கேப்டன்; அசத்திவிட்டார்.! இந்திய அணி செய்த பெரிய தவறு அதுதான்.! சஞ்சய் மஞ்சரேக்கர் அலசல்
இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன்சியை சஞ்சய் மஞ்சரேக்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3வது டெஸ்ட்டில் ஆடாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி செய்தார். 2018ம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்த போட்டியில் ஸ்மித் சிறப்பாக கேப்டன்சி செய்தார். வீரர்களை பயன்படுத்திய விதம், வியூகங்கள், பவுலிங் சுழற்சி என அனைத்துவகையிலும் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக செயல்பட்டார்.
பிட்ச்சை விமர்சிக்கும் முன்னாள் வீரர்களை பிரித்து மேய்ந்த ரோஹித் சர்மா
2வது இன்னிங்ஸில் ஷ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களை அடித்து ஆடிக்கொண்டிருந்தபோது, உடனே ஃபாஸ்ட் பவுலாரான மிட்செல் ஸ்டார்க்கை பந்துவீசவைத்து ஷ்ரேயாஸ் ஐயரை வீழ்த்தினார். பவுலிங்கிற்கு ஏற்ப சிறப்பாக திட்டமிட்டு ஃபீல்டிங் செட்டப் செய்து இந்திய வீரர்களை வீழ்த்தினார். ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக கேப்டன்சி செய்த அதேவேளையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன்சியில் சொதப்பினார்.
முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாமல் எப்படி தோல்விகளிலிருந்து மீளப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை அருமையாக வழிநடத்தி வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன்சி குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக கேப்டன்சி செய்தார். ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிய நிலையில், உடனே மிட்செல் ஸ்டார்க்கை எடுத்துவந்து ஷ்ரேயாஸ் ஐயரை வீழ்த்தினார்.
இந்திய அணி 2 இன்னிங்ஸ்களிலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாக ஜடேஜாவை இறக்கிவிட்டது பெரிய தவறு. பேட்ஸ்மேனாக ஆடும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாக, இடது - வலது காம்பினேஷன் என்ற ஒரே காரணத்திற்காக ஜடேஜாவை இறக்கியது பெரிய தவறு என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்தார்.