- Home
- Sports
- Sports Cricket
- IPL 2026: தோனியின் 'பேவரிட்' ஆல்ரவுண்டரை தூக்கிய மும்பை இந்தியன்ஸ்..! பல்தான்ஸ் ரசிகர்கள் ஹேப்பி!
IPL 2026: தோனியின் 'பேவரிட்' ஆல்ரவுண்டரை தூக்கிய மும்பை இந்தியன்ஸ்..! பல்தான்ஸ் ரசிகர்கள் ஹேப்பி!
மும்பை இந்தியன்ஸ் அணி ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை லக்னோ அணியிடம் இருந்து வாங்கியுள்ளது. இதேபோல் குஜராத் அணியில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரூதர்ஃபோர்ட்யும் மும்பை அணி டிரேடு மூலம் வாங்கியுள்ளது.

மும்பை அணிக்கு சென்ற ஷர்துல் தாக்கூர்
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் தொடர்பான ஆர்வம் இப்போதே எழுந்துள்ளது. விரைவில் ஐபிஎல் மினி ஏலம் நடக்க உள்ள நிலையில், ஏலத்திற்கு முன் அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள், அணியில் இருந்து வெளியாகும் வீரர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே முன்னாள் ஆல்ரவுண்டரும், இப்போதைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரருமான ஷர்துல் தாக்கூரை வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில் ரூ.2 கோடிக்கு தங்கள் அணியில் எடுத்துள்ளது.
லக்னோ அணியில் இருந்த ஷர்துல்
இது தொடர்பாக ஐபிஎல் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ''மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இடையேயான வர்த்தகத்தைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். மும்பையைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர், 18வது லீக் சீசனில் காயம் காரணமாக 2 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
ரூ.2 கோடிக்கு ஏலம்
இந்த லீக்கில் அவர் 10 ஆட்டங்களில் விளையாடினார். ஷர்துல் தான் பிரதிநிதித்துவப்படுத்திய அணிகளுக்கு ஒரு யூட்டிலிட்டி வீரராக இருந்து வருகிறார், மீண்டும் மீண்டும் சூப்பரான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார். ஷர்துல் தற்போதுள்ள கட்டணமான 2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.
அர்ஜூன் டெண்டுல்கர் வெளியே?
ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு மிகவும் பிடித்தமான வீரரான ஷர்துல் தாக்கூர் சிஎஸ்கே அணிக்காக விளையாடி பல்வேறு போட்டிகளில் வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்.
ரூதர்ஃபோர்ட்டையும் வாங்கிய மும்பை அணி
இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆல்ரவுண்டர் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். 2.6 கோடி ரூபாய்க்கு குஜராத் அணியால் ஆல் ரூதர்ஃபோர்ட், தனது தற்போதைய கட்டணத்தில் மும்பை அணிக்கு மாறுவார். 27 வயதான ரூதர்ஃபோர்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார், இதற்கு முன்பு 2019 இல் டெல்லி கேபிடல்ஸ் அணியிலும், 2022 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் விளையாடியுள்ளார். 2020 இல் மும்பை அணியில் இருந்த அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.