- Home
- Sports
- Sports Cricket
- Arjun Tendulkar: சச்சின் மகனை கைகழுவும் மும்பை இந்தியன்ஸ்..! உள்ளே வரும் சிஎஸ்கே ஆல்ரவுண்டர்!
Arjun Tendulkar: சச்சின் மகனை கைகழுவும் மும்பை இந்தியன்ஸ்..! உள்ளே வரும் சிஎஸ்கே ஆல்ரவுண்டர்!
மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் மகனான பாஸ்ட் பவுலர் அர்ஜுன் டெண்டுல்கரை வெளியேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

ஐபிஎல் 2026
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஏலத்திற்கு முன் அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கரை வெளியேற்றும் மும்பை இந்தியன்ஸ்
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பை அணியிலிருந்து விலகி கோவாவுக்காக விளையாடும் அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் வீரர் பரிமாற்றம் மூலம் அர்ஜுன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அர்ஜுன் டெண்டுல்கரை கொடுத்துவிட்டு, சிஎஸ்கே அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், ரஞ்சி டிராபியில் மும்பை கேப்டனாகவும் இருந்த ஷர்துல் தாக்கூரை மீண்டும் அணிக்கு கொண்டு வர மும்பை இந்தியன்ஸ் முயற்சிப்பதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
5 போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்ற அர்ஜுன்
இருப்பினும், இது ஐபிஎல் விதிகளின்படியான வீரர் பரிமாற்றமாக இருக்காது என்றும், இரு அணிகளும் பரஸ்பர புரிதலுடன் பணப் பரிமாற்றம் செய்துகொள்ளும் என்றும் கிரிக்பஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2023-ல் அர்ஜுன் டெண்டுல்கர் முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். மூன்று சீசன்களில், இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுனுக்கு ஐந்து போட்டிகளில் மட்டுமே ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஷர்துல் தாக்கூர் மீண்டும் வருகிறார்
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு அர்ஜுனை மும்பை அணி விடுவித்தாலும், ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியது. ஆனால், கடந்த ஆண்டு ஏலத்தில் ஷர்துல் தாக்கூரை மும்பை உட்பட எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. பின்னர், லக்னோ வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக ஷர்துல் லக்னோ அணியில் சேர்க்கப்பட்டார்.
ரஞ்சியில் மும்பை கேப்டன்
லக்னோவுக்காக 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல், இந்த ரஞ்சி சீசனில் மும்பை அணியின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஞ்சி டிராபியில் மும்பை அணியில் வாய்ப்பு கிடைக்காததாலும், எதிர்பார்ப்புகளின் அழுத்தம் காரணமாகவும் அர்ஜுன் இரண்டு சீசன்களுக்கு முன்பு கோவா அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்தார்.