- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA டெஸ்ட், ஓடிஐ, டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
IND vs SA டெஸ்ட், ஓடிஐ, டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
IND vs SA 2025: இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட், ஓடிஐ, டி20 தொடர் அட்டவணை, இந்த தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா தொடர்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ம் தேதி குவஹாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கும்.
ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடர்
முதல் 50 ஓவர் ஒருநாள் போட்டி நவம்பர் 30 ஆம் தேதி ஜார்க்கண்டில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி டிசம்பர் 3 ம் தேதி நியூ ராய்ப்பூரிலும், மூன்றாவது போட்டி ஆந்திராவிலும் நடைபெற உள்ளது. டி20 போட்டிகளை பொறுத்தவரை முதல் போட்டி ஒடிசாவில் டிசம்பர் 9ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி டிசம்பர் 11ம் தேதியும், மூன்றாவது போட்டி டிசம்பர் 14ம் தேதியும், நான்காவது டி20 போட்டி டிசம்பர் 17 ம் தேதியும், ஐந்தாவது மற்றும் கடைசி டி20ம் தேதியும் நடைபெற உள்ளன.
எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட், ஓடிஐ மற்றும் டி20 போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும். அனைத்து ஒருநாள் போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். அனைத்து டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா தொடரை எந்த டி.வி.யில் பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட், ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம்? ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் வர்னணையுடன் போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா தொடரை ஓடிடியில் பார்க்கலாமா?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.