- Home
- Sports
- Sports Cricket
- இதெல்லாம் தேவையா? எதிரணி வீரரிடம் வம்பிழுத்த மூத்த வீரர்.. ஐசிசி கொடுத்த தண்டனை.. ரசிகர்கள் ஷாக்!
இதெல்லாம் தேவையா? எதிரணி வீரரிடம் வம்பிழுத்த மூத்த வீரர்.. ஐசிசி கொடுத்த தண்டனை.. ரசிகர்கள் ஷாக்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதால் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபிக்கு 15% அபராதமும், ஒரு தண்டனை புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? என்பது குறித்து பார்ப்போம்.

முகமது நபிக்கு ஐசிஐ அபராதம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை குரூப் டி போட்டியின் போது, ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1-ஐ மீறியதற்காக, ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் முகமது நபிக்கு அவரது போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின் 14வது ஓவரின் தொடக்கத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி அணிந்திருந்த கைப்பட்டை குறித்து நடுவர்களுடன் நபி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
களத்தில் என்ன நடந்தது?
அதாவது லுங்கி என்கிடி அணிந்திருந்த கைப்பட்டை (மஞ்சள், சிறிது வெள்ளை நிறம்) பந்தில் நிறத்தை போன்று இருப்பதால் தன்னால் சரியாக பார்க்க முடியவில்லை. இதனால் கவனச்சிதறல் ஏற்படுவதாக முகமது நபி தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கள நடுவர்கள் உடனே இதை ஆய்வு செய்து அந்த கைப்பட்டை என்கிடி அணியும் மஞ்சள் நிறம் கொண்டது தான் என்றும் இதனால் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறி முகமது நபி கோரிக்கையை நிராகரித்தனர். ஆனாலும் நபி என்கிடி மற்றும் தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்கரமிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
முதன் முறையாக இரண்டு சூப்பர் ஓவர்
இந்த நிலையில் தான் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதால் முகமது நபிக்கு 15% அபராதமும், ஒரு தண்டனை புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி சர்ச்சையை ஏற்படுத்திய இந்த போட்டியில் 2 சூப்பர் ஓவர் நடந்தது.
2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வி அடைந்தது. அதாவது இரு அணிகளும் 187 ரன்கள் எடுத்து போட்டி சமனில் முடிந்த பிறகு நடந்த முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் 17 ரன் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவும் 17 ரன் எடுத்ததால் இது டை ஆனது.
ஆப்கானிஸ்தான் போராடி தோல்வி
இதனால் 2வது சூப்பர் ஓவர் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 23 ரன்கள் எடுத்தது. 24 ரன்கள் என்ற சவாலான இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான் நபியின் விக்கெட்டை இழந்தது.
அதன்பிறகு பேட்டிங் செய்ய வந்த ரஹ்மானுல்லா குர்பாஸ், அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை அடித்தார். கடைசி பந்தில் மேலும் ஒரு சிக்ஸர் தேவைப்பட்ட நிலையில், அவர் பாயிண்டில் கேட்ச் ஆனார். 19 ரன் மட்டுமே எடுத்த ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தது.

