MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Jiohotstar: வெறும் 100 ரூபாய்க்கு டி20 உலகக்கோப்பை பார்த்து ரசிக்கலாம்.. ஜியோ கிரிக்கெட் பிளான்!

Jiohotstar: வெறும் 100 ரூபாய்க்கு டி20 உலகக்கோப்பை பார்த்து ரசிக்கலாம்.. ஜியோ கிரிக்கெட் பிளான்!

T20 World Cup 2026: டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வெறும் 100 ரூபாய்க்கு உலகக்கோப்பை முழுவதையும் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்த்து ரசிக்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 Min read
Author : Rayar A
Published : Feb 10 2026, 06:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டி20 உலகக்கோப்பை 2026
Image Credit : ICC/X

டி20 உலகக்கோப்பை 2026

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டி20 உலகக்கோப்பை போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் பார்த்து ரசிக்கலாம். 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் தமிழ் வர்னனையுடன் கண்டு மகிழலாம். இதேபோல் மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் (Jiohotstar) ஓடிடியில் பார்க்கலாம். பொதுவாக ஜியோ ஹாட்ஸ்டார் பார்ப்பதற்கு தனியாக சந்தா கட்டணம் செலுத்த வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
100 ரூபாய்க்கு டி20 உலகக்கோப்பை பார்க்கலாம்
Image Credit : Gemini AI

100 ரூபாய்க்கு டி20 உலகக்கோப்பை பார்க்கலாம்

இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெறும் 100 ரூபாய்க்கு டி20 உலகக்கோப்பை முழுவதையும் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கனிந்துள்ளது. அதாவது ஜியோவின் ரூ.100 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் குறைந்த பட்ஜெட்டில் ரசிகர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சூப்பரான கிரிக்கெட் டேட்டா பேக் ஆகும். இந்த பிளான் 30 நாட்கள் செல்லுபடியாகும் 5 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது.

மேலும் 30 நாள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் அடங்கும். ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் கிரிகெட் போட்டியை மலிவு விலையில் பார்ப்பதற்கு இது சிறந்த திட்டமாகும். இது ஒரு டேட்டா வவுச்சர் பிளான் என்பதால், பயனர்கள் இது செயல்பட ஒரு செயலில் உள்ள அடிப்படைத் திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

33
ஜியோ ரூ.195 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
Image Credit : stockPhoto

ஜியோ ரூ.195 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

அதிக டேட்டாவை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.195 திட்டம் மொத்தம் 15 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த வவுச்சர் 90 நாள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அத்துடன் 90 நாள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் உள்ளடக்கியது. முழு டி20 உலகக் கோப்பையையும் பார்க்க விரும்புவோருக்கு இந்த பிளான் மிகவும் சிறந்ததாக இருக்கும்.

Vi ரூ.44 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

வோடோபோன் ரூ.44 திட்டம் ஒரு தனித்துவமான, மிகக் குறைந்த விலை சாச்செட் பேக் ஆகும். இந்த பிளானுக்கு வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா ஒரு நாளுக்கு (நள்ளிரவு வரை) மட்டுமே செல்லுபடியாகும் என்றாலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா முழு 30 நாட்களுக்கு நீடிக்கும். ஆகவே கிரிக்கெட் போட்டிகளை பார்க்க இதுவும் சிறந்த பிளான். இந்த பிளானை செயல்படுத்த ஆக்டிவ் பிளான் இருப்பது அவசியமாகும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
ஜியோ சிறந்த ரீசார்ஜ் திட்டம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!
Recommended image2
India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி
Recommended image3
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
T20 WC IND vs NAM.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. மேட்ச் வின்னர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!
Recommended image2
BSNL: ரூ.200 கூட இல்ல.. 42 நாள் வேலிடிட்டி.. டேட்டா + கால்ஸ்.. மாஸ் காட்டும் பிஎஸ்என்எல்.. செம பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved