- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG Test: இங்கிலாந்து மண்ணில் பட்டய கிளப்பும் கே.எல்.ராகுல்! மிகப்பெரும் சாதனை!
IND vs ENG Test: இங்கிலாந்து மண்ணில் பட்டய கிளப்பும் கே.எல்.ராகுல்! மிகப்பெரும் சாதனை!
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்து கே.எல் சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

IND vs ENG: KL Rahul's New Record On England Soil
மான்செஸ்டரில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய வீரர் கே.எல். ராகுல் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து மண்ணில் 1,575 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரராக திகழ்கிறார்.
இங்கிலாந்து மண்ணில் கே.எல்.ராகுல் சாதனை
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ராகுல் டிராவிட் இங்கிலாந்து மண்ணில் 1,376 ரன்கள் அடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ள சுனில் கவாஸ்கர் 1,152 ரன்களும், 4வது இடத்தில் உள்ள விராட் கோலி 1096 ரன்களும் எடுத்துள்ளனர். கே.எல்.ராகுல் 4வது டெஸ்ட்டிலேயே விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எல்.ராகுலின் அபாரமான பேட்டிங்
ஆஸ்திரேலியா தொடர் வரை கே.எல்.ராகுல் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்கவில்லை உள்ளூரில் நடந்தப்நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்டில் ரோஹித் சர்மா இடம் பெறாததால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக விளையாடினார்.
அந்த முழு தொடரிலும் அவர் தனது தகுதியை நிரூபித்து, மீண்டும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிரந்தரமாக இடம்பிடித்ததார்.
இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்
இப்போதைய இங்கிலாந்து தொடரிலும் ராகுல் 3 டெஸ்ட் போட்டிகளில் 375 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு சதங்கள் நொறுக்கியுள்ளார். தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக உருவெடுத்துள்ளார். முன்னதாக, இன்று தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்ததால் இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணி முதலில் பேட்டிங்
மேகமூட்டமான சூழ்நிலையில் பிட்ச் பவுலர்களுக்கு கைகொடுத்ததால் இங்கிலாந்து பவுலர்கள் நன்றாக பந்துகளை ஸ்விங் செய்தனர். பேட்டிங் செய்ய மிகவும கடினமாக இருந்த நிலையில், தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் அவசரப்படாமல் பொறுமையாக விளையாடினார்கள். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்த நிலையில், நன்றாக விளையாடிய கே.எல்.ராகுல் 46 ரன்னில் வோக்ஸ் பந்தில் சாக் க்ரொலியிடம் கேட்ச் ஆனார்.
ஜெய்ஸ்வால் அரை சதம்
இதனைத் தொடர்ந்து சூப்பர் அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் (58 ரன்) டாவசன் பந்தில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 12 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.ட.பிள்யூ ஆனார். இந்திய அணி இப்போது வரை 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.