- Home
- Sports
- Sports Cricket
- எல்லை மீறிய ரசிகர்.. பொறுமை இழந்த பும்ரா.. கடும் கோபத்தில் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்!
எல்லை மீறிய ரசிகர்.. பொறுமை இழந்த பும்ரா.. கடும் கோபத்தில் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்!
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ லக்னோ விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா
உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா. பொதுவாக அமைதியான குணம் கொண்ட பும்ரா, களத்தில் எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ஆக்ரோஷமாக கொண்டாட மாட்டார். இப்படிப்பட்ட பும்ரா பொது வெளியில் ரசிகர் ஒருவரின் செல்போனை பிடுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகரிடம் போனை புடுங்கிய பும்ரா
அதாவது தன்னிடம் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை ஜஸ்பிரித் பும்ரா பிடுங்கினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் பும்ரா, முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பிறகு, தனிப்பட்ட காரணங்களுக்காக மூன்றாவது டி20 போட்டியில் இருந்து விலகியிருந்தார். நான்காவது டி20 போட்டிக்கான இந்திய அணியுடன் சேர்வதற்காக பும்ரா லக்னோவுக்கு வந்தபோது விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
எல்லை மீறிய ரசிகர்
பும்ரா விமான நிலையத்துக்கு வந்தபோது அவரை பார்த்த ரசிகர் ஒருவர் தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது பும்ரா அவரிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் அதையும் மீறி அந்த ரசிகர் வீடியோ செல்பி எடுத்ததால் ஆத்திரம் அடைந்த பும்ரா அவரின் செல்போனை உடனே புடுங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர் கதிகலங்கிப் போனார்.
பும்ராவுக்கு ஆதரவாக, எதிராக கருத்து
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ லக்னோ விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பும்ராவின் செயலை சிலர் விமர்சித்தாலும், மற்ற சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களை வைத்து தானே வளர்கிறார்கள்
''இந்தியாவில் சினிமா, விளையாட்டு பிரபலங்களை மக்கள் கடவுள் போல் பார்க்கின்றனர். பொது வெளியில் பிரபலங்கள் வரும்போது ஆர்வக்கோளாறில் ரசிகர்கள் இப்படி செய்வது சகஜம் தான். அதற்காக பும்ரா பொறுமையிழந்து இப்படியா செய்வது? ரசிகர்களை வைத்து தானே அவர்கள் வளர்கிறார்கள்'' என்று ஒரு சிலர் பும்ராவின் செயலை விமர்சித்தனர்.
ரசிகர்கள் செய்வதது தவறு
அதே வேளையில் மற்றொரு சிலர், ''எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் அவர்களுக்கு என்று தனிப்பட்ட விஷயங்கள் உள்ளன. பும்ரா எச்சரித்த பிறகும் அந்த ரசிகர் வீடியோ எடுத்தது தவறு. பொதுவெளியில் இப்படி எல்லை மீறும் ரசிகர்களால் பிரபலங்களுக்கு தர்மசங்கடமான நிலை உருவாகிறது'' என பும்ராவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

