- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG Test: இந்திய அணிக்கு எமனாக நிற்கும் எட்ஜ்பாஸ்டன் மைதானம்! இப்படி ஒரு மோசமான ரிக்கார்டா?
IND vs ENG Test: இந்திய அணிக்கு எமனாக நிற்கும் எட்ஜ்பாஸ்டன் மைதானம்! இப்படி ஒரு மோசமான ரிக்கார்டா?
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடக்கும் எட்ஜ்பாஸ்டன் பிட்ச் ரிப்போர்ட், இந்திய அணியின் வெற்றி, தோல்வி குறித்து பார்ப்போம்.

IND vs ENG Test: India's Worst Record At Edgbaston
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை (ஜுன் 2) பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதால் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
எட்ஜ்பாஸ்டன் பிட்ச் ரிப்போர்ட்
2வது டெஸ்ட் போட்டி நடக்கும் எட்ஜ்பாஸ்டன் பிட்ச் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிற்கும் ஒத்துழைக்கும். இந்த பிட்ச் முதல் இரண்டு நாட்களில் கூடுதல் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் உடன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
ஆனால் மூன்று மற்றும் நான்காவது நாளில் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும். அவர்களால் வழக்கமான கிரிக்கெட் ஷாட்களை ஆட முடியும். 5வது நாள் பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும். சுழலுடன் சேர்த்து பவுன்ஸும் இருக்கும் என்பதால் ஸ்ப்பின்னர்களுக்கு கைகொடுக்கும்.
மழைக்கு வாய்ப்பு உள்ளதா?
எட்ஜ்பாஸ்டனில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 334 ரன்கள் ஆகும். முதல் டெஸ்ட் போட்டி நடந்த லீட்ஸ் போல் இந்த மைதானத்திலும் சேஸிங் செய்த அணிகள் தான் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆகவே டாஸ் வெல்லும் அணிகள் பவுலிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.
எட்ஜ்பாஸ்டனில் முதல் 3 நாள் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் 4வது நாளில் மழை பெய்ய 62% வாய்ப்புள்ளதாகவும், 5வது நாளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் போட்டி முழுமையாக நடப்பதில் சிக்கல் உள்ளது.
இந்திய அணிக்கு மோசமான மைதானம்
எட்ஜ்பாஸ்டன் இந்திய அணிக்கு மிகவும் மோசமான மைதானமாக விளங்கி வருகிறது. ஏனெனில் இந்த மைதானத்தில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை.
கடைசியாக 2022ம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இந்த மைதானத்தின் இந்திய அணியின் அதிகப்பட்ச ஸ்கோர் 336. குறைந்தபட்ச ஸ்கோர் 191 ஆகும்.
பும்ரா விளையாட மாட்டார்
2வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் பரவி வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகும். இதனால் இந்திய அணி முகமது சிராஜையே அதிகம் நம்பியுள்ளது. 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷாக் க்ரொலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் மற்றும் ஷோயப் பஷீர்.