- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG Test: 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்! பிளேயிங் லெவன் இதோ!
IND vs ENG Test: 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்! பிளேயிங் லெவன் இதோ!
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.

Indian Team Playing Eleven In 4th Test
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. லார்ட்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23 ஆம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்கவுள்ளது.
கருண் நாயர் பேட்டிங் மோசம்
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்யவோ அல்லது தொடரை வெல்லும் வாய்ப்பையோ இந்திய அணியால் தக்க வைத்துக் கொள்ள முடியும். 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது விராட் கோலி இடத்தில் களமிறங்கும் கருண் நாயர் சிறப்பாக செயல்படவில்லை. அவர் மூன்று டெஸ்ட்களில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
குல்தீப் யாதவ் இடம்பெற வாய்ப்பு
கருண் நாயரின் பேட்டிங் பார்ம் மிகவும் மோசமாக உள்ளதால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் அல்லது அபிமன்யூ ஈஸ்வரன் களமிறங்க வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் காயம் முழுமையாக குணமடைந்து விட்டதா? என்பது தெரியவில்லை. அப்படி காயம் குணமடையாவிட்டால் அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் இடம்பெறுவார். இதேபோல் ஓல்ட் டிராஃபோர்டு மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமானது என்பதால் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம்பெறவும் சான்ஸ் உள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ: சுப்மன் கில் (கேப்டன்), கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன் அல்லது சாய் சுதர்சன்,ரிஷப் பந்த் அல்லது துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.