- Home
- Sports
- Sports Cricket
- உங்களுக்கு(ஆஸி) பிட்ச் தானே பிரச்னை.. அகமதாபாத் பிட்ச்சை பளபளன்னு தர்றோம்..! முடிஞ்சா சம்பவம் செய்ங்க - ரோஹித்
உங்களுக்கு(ஆஸி) பிட்ச் தானே பிரச்னை.. அகமதாபாத் பிட்ச்சை பளபளன்னு தர்றோம்..! முடிஞ்சா சம்பவம் செய்ங்க - ரோஹித்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நடக்கும் அகமதாபாத் ஆடுகளத்தை இங்கிலாந்தின் லார்ட்ஸ் ஆடுகளம் போல் தயார் செய்யவுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இனி இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவறவிட்டது. ஒயிட்வாஷ் ஆகாமல் மரியாதையுடன் நாடு திரும்புவதில் ஆஸ்திரேலிய அணியின் கவனம் உள்ளது.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதற்காக தீவிரமாக தயாராகியும் அந்த அணிக்கு பிரயோஜனமில்லை. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த நிலையில், இந்திய ஆடுகளங்கள், இந்திய அணியின் பலத்திற்கு ஏற்பவும் ஸ்பின்னிற்கு சாதகமாகவும் தயார் செய்யப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி நடக்கும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் ஆடுகளம், மற்ற 3 டெஸ்ட் போட்டிகள் நடந்த ஆடுகளத்திலிருந்து மாறுபட்டதாக இருக்கும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் ஃபைனலில் மோத அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி 3வது டெஸ்ட்டிலும் ஜெயித்தால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிவிடும். ஆஸ்திரேலிய அணி 2ம் இடத்திற்கு பின் தங்கிவிடும். எனவே இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறுவது உறுதி.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடப்பதால், அது இந்திய கண்டிஷனிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதால், அதற்கு தயாராகும் விதமாக 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் அகமதாபாத் ஆடுகளத்தை தயார் செய்ய வாய்ப்புள்ளதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களை குறைகூறிய ஆஸ்திரேலிய அணி அகமதாபாத் ஆடுகளத்தில் என்ன செய்ய காத்திருக்கிறது என்று பார்ப்போம்.