MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • MS Dhoni: தோனிக்கு சிஎஸ்கே பங்குகளின் மீது ஆசையா? உண்மையை உடைத்த அணி நிர்வாகம்!

MS Dhoni: தோனிக்கு சிஎஸ்கே பங்குகளின் மீது ஆசையா? உண்மையை உடைத்த அணி நிர்வாகம்!

MS Dhoni: கடந்த ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க முயற்சிப்பதாக வதந்திகள் பரவின. இது குறித்து அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Sep 12 2026, 08:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தோனிக்கு சிஎஸ்கே பங்குகளின் மீது ஆசையா?
Image Credit : Google

தோனிக்கு சிஎஸ்கே பங்குகளின் மீது ஆசையா?

இந்திய முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே வீரருமான மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வாங்க விரும்பினாரா? சமீபத்தில் இப்படி ஒரு தகவல் பரவி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிஎஸ்கே-வின் முன்னாள் கேப்டனான தோனி, அணியின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாகவும், ஆனால் அவர் விதித்த நிபந்தனைகளுக்கு அணி நிர்வாகம் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிஎஸ்கே முக்கிய அதிகாரி மறுப்பு
Image Credit : our own

சிஎஸ்கே முக்கிய அதிகாரி மறுப்பு

ஆனால், இந்த தகவலை சிஎஸ்கே-வின் முக்கிய அதிகாரி ஒருவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். "தோனி இதுபற்றி எங்களிடம் ஒருபோதும் கேட்டதில்லை. நாங்கள் இதுகுறித்து விவாதிக்கவே இல்லை. அவர் என். சீனிவாசனிடம் இதுபற்றி பேசினாரா என்பது குறித்தும் எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை" என்று அவர் கூறியுள்ளார். ஆனாலும், தோனியிடம் சிஎஸ்கே பங்குகள் சுத்தமாக இல்லை என்று சொல்ல முடியாது. முன்பு பங்குகளை வாங்குவதற்கு வாய்ப்பு இருந்தபோது, அவர் சில பங்குகளை வாங்கியுள்ளார்.

தோனியிடம் இருப்பது மிகச் சிறிய பங்கு

சிஎஸ்கே அணி, பொது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை. அதனால், அதன் பங்குகளை நேரடியாக வாங்க முடியாது. ஆனால், 'ஆஃப்-மார்க்கெட்' எனப்படும் தனிப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் பங்குகளை வாங்க முடியும். கிடைத்த தகவல்களின்படி, தோனியிடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் உள்ளன.

ஆனால், சிஎஸ்கே-வின் மொத்த பங்கு மூலதனத்தோடு ஒப்பிடும்போது இது மிக மிகச் சிறிய பகுதி. சுமார் 30 கோடிக்கும் அதிகமான பங்குகள் பொது முதலீட்டாளர்களிடம் உள்ளன, இது மொத்தப் பங்குகளில் கிட்டத்தட்ட 40% ஆகும். எனவே, தோனியிடம் உள்ள ஒரு லட்சம் பங்குகள் என்பது மிகவும் குறைவு.

Related Articles

Related image1
Most Educated Cricketer: தோனி, கோலி, ரோகித் இல்ல.. அதிகம் ப‌டித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
Related image2
IND vs ZIM: தோனி சாதனையை தூள் தூளாக்கிய திலக் வர்மா.. ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!
34
சிஎஸ்கே யார் கட்டுப்பாட்டில்?
Image Credit : Getty

சிஎஸ்கே யார் கட்டுப்பாட்டில்?

மறுபுறம், சீனிவாசன் குடும்பத்திடம் 55% க்கும் அதிகமான பங்குகள் உள்ளன. அவர்களே அணியின் கட்டுப்பாட்டை வைத்துள்ளனர். தற்போதைய நிலையில், ஒரு ஐபிஎல் அணியின் சந்தை மதிப்பு மிக அதிகமாக உள்ளது. சமீபத்தில் ஒரு ஐபிஎல் அணி ₹16,600 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டது.

அதன்படி பார்த்தால், தோனியிடம் உள்ள பங்குகளின் மதிப்பு சுமார் ₹2.6 கோடி முதல் ₹3 கோடி வரை இருக்கலாம். சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் மற்றும் விளம்பரங்கள் மூலம் 21 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி சம்பாதித்த பணத்தோடு ஒப்பிடும்போது இது ஒரு சிறிய தொகைதான். உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனியின் சொத்து மதிப்பு சுமார் ₹1,200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகும், அணியில் தோனியின் செல்வாக்கு குறையவில்லை. கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும், அணியின் முக்கிய முடிவுகளில் அவரது பங்கு இன்றும் உள்ளது. குறிப்பாக, புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் தோனியின் முடிவுக்காக சிஎஸ்கே நிர்வாகம் காத்திருக்கிறது.

44
அமெரிக்காவில் தோனி
Image Credit : ANI

அமெரிக்காவில் தோனி

தோனி தற்போது அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் செப்டம்பர் 22 அன்று நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்த பிறகு, சிஎஸ்கே அதிகாரிகள் அவருடன் ஆலோசனை நடத்தி புதிய பயிற்சியாளர் குறித்து இறுதி முடிவை எடுப்பார்கள். அதன் பிறகு, வீரர்கள் பரிமாற்றம் மற்றும் டிரேடிங் குறித்தும் விவாதிக்கப்படும்.

வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வந்தாலும், அணி நிர்வாகம் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அந்தப் பயிற்சியாளர் மற்றொரு அணியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தோனி நாடு திரும்பியதும், சிஎஸ்கே உயர் அதிகாரிகளுடன் நடக்கும் கூட்டத்திற்குப் பிறகே பயிற்சியாளர் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். எனவே, பங்குகள் வாங்கும் வதந்திகளைத் தாண்டி, அடுத்த சீசனுக்கான திட்டமிடலிலும் தோனியின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எம். எஸ். தோனி
சிஎஸ்கே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Team India: ஜப்பானில் இந்திய அணிக்கு 5 ஸ்டார் ஹோட்டல் வசதி இல்லையா? உண்மையை உடைத்த பிசிசிஐ!
Recommended image2
Sachin Tendulkar: ஏர்போர்ட்டில் சச்சினுக்கு மெட்டல் டிடெக்டர் செக்கிங் கிடையாது! ஏன் தெரியுமா?
Recommended image3
சுப்மன் கில் பெஞ்சில் உட்கார வச்சதுக்கு கோபமா? இங்கிலாந்தில் பவுலிங்கில் கலக்கிய தமிழக வீரர்!
Related Stories
Recommended image1
Most Educated Cricketer: தோனி, கோலி, ரோகித் இல்ல.. அதிகம் ப‌டித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
Recommended image2
IND vs ZIM: தோனி சாதனையை தூள் தூளாக்கிய திலக் வர்மா.. ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved