- Home
- Sports
- Sports Cricket
- Sachin Tendulkar: ஏர்போர்ட்டில் சச்சினுக்கு மெட்டல் டிடெக்டர் செக்கிங் கிடையாது! ஏன் தெரியுமா?
Sachin Tendulkar: ஏர்போர்ட்டில் சச்சினுக்கு மெட்டல் டிடெக்டர் செக்கிங் கிடையாது! ஏன் தெரியுமா?
Sachin Tendulkar: விமான நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் சோதனை எல்லோருக்கும் உண்டு. ஆனால், சச்சின் டெண்டுல்கருக்கு மட்டும் இதில் விலக்கு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இதன் பின்னணியில் உள்ள காரணத்தை பார்க்கலாம்.
15

Image Credit : Gemini AI
ஏர்போர்ட்டில் சச்சினுக்கு மெட்டல் டிடெக்டர் செக்கிங் கிடையாது
சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், சச்சின் டெண்டுல்கர் விமான நிலைய பாதுகாப்பு சோதனையின்போது மெட்டல் டிடெக்டரை கடந்து நேராகச் சென்றார். இதை பார்த்த பலரும், 'விஐபி என்பதால் இந்த சலுகையா?' என்று கேள்வி எழுப்பினர். ஆனால், இது பிரபல அந்தஸ்துக்காக கொடுக்கப்பட்ட விலக்கு அல்ல.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Nabila Jamal/X
பாரத ரத்னா விருது பெற்றவர்
சச்சின் டெண்டுல்கர், இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான 'பாரத ரத்னா' விருதைப் பெற்றவர். இந்த விருதைப் பெற்றவர்களுக்கு, விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது இந்திய அரசின் ஒரு சிறப்பு நெறிமுறை. சச்சின் தனிப்பட்ட முறையில் இதைக் கேட்கவில்லை; பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதால் இந்த மரியாதை அவருக்குக் கிடைக்கிறது.
35
Image Credit : Nabila Jamal/X
இந்த பட்டியலில் யார்? யார்?
இந்திய விமான நிலையங்களின் பாதுகாப்பை 'பியூரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி' (BCAS) என்ற அமைப்புதான் கண்காணிக்கிறது. இந்த அமைப்பு, நாட்டின் மிக உயரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றோருடன், பாரத ரத்னா விருது பெற்றவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.
45
Image Credit : Nabila Jamal/X
உடல் ரீதியான சோதனைகள் தேவையில்லை
விமான நிலைய பாதுகாப்பு சோதனைகளில் இருந்து விலக்கு பெறும் பட்டியலில் இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி, சில மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மற்ற பயணிகளைப் போல உடல் ரீதியான சோதனைகள் தேவையில்லை.
55
Image Credit : Nabila Jamal/X
சச்சினுக்கு பாதுகாப்பே இல்லையா?
மெட்டல் டிடெக்டர் சோதனையில் இருந்து விலக்கு என்றால், சச்சினுக்கு பாதுகாப்பே இல்லை என்று அர்த்தமல்ல. அவர் பயணம் செய்யும்போது, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (CISF) முழு பாதுகாப்பையும் உறுதி செய்கின்றனர். குறிப்பாக, பிரபலங்கள் பயணிக்கும்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற பணிகளையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்கின்றனர்.
Latest Videos

