MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Arjun Tendulkar: உன் கால்கள் தரையில் இருக்கட்டும்! மகன் அர்ஜூனை பாராட்டி சச்சின் உருக்கமான பதிவு!

Arjun Tendulkar: உன் கால்கள் தரையில் இருக்கட்டும்! மகன் அர்ஜூனை பாராட்டி சச்சின் உருக்கமான பதிவு!

Arjun Tendulkar: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடியதை பார்த்து சச்சின் போட்ட உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Rayar A
Published : May 24 2026, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஒரு வழியாக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர்
Image Credit : stockPhoto

ஒரு வழியாக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர்

2026 ஐபிஎல் சீசன் முழுவதும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் பெஞ்சில் இருந்தார். கடைசியாக, லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அர்ஜுன் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டி முடிந்ததும், சச்சின் டெண்டுல்கர் தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில், தன் மகன் அர்ஜுனின் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டியிருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் பதிவு

சச்சின் தனது பதிவில், 'வெல்டன் அர்ஜுன்! இந்த சீசனில் உன் திறமையை நம்பி, கடைசி வரை பொறுமையாகக் காத்திருந்து, கடினமாக உழைத்தாய். கடைசிப் போட்டி வரை வாய்ப்புக்காகக் காத்திருந்தபோதும், பாசிட்டிவாக இருந்ததைப் பார்க்க பெருமையாக இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். 'கிரிக்கெட் உன் திறமையை சோதிப்பது போலவே, உன் பொறுமையையும் சோதிக்கும். இன்று இரண்டையும் நீ சிறப்பாகக் கையாண்டாய். உன் கால்கள் தரையில் இருக்கட்டும். கிரிக்கெட் மீதான காதல் இப்படியே தொடரட்டும். எப்போதும் என் அன்பு உண்டு' என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் எழுதியிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஓரளவு சிறப்பாக விளையாடிய அர்ஜுன்
Image Credit : X

ஓரளவு சிறப்பாக விளையாடிய அர்ஜுன்

19-வது ஐபிஎல் சீசனுக்கு முன்பு, அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெறும் 30 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. இந்த சீசன் தொடங்கி 56 நாட்கள், 67 போட்டிகளுக்குப் பிறகு, லக்னோவின் கடைசிப் போட்டியில் அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அர்ஜுன், பேட்டிங்கில் 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில், 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து, 9 எக்கானமியில், அபாயகரமான பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங்கின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Related Articles

Related image1
ஜாம்பவான் சச்சின் மகனுக்கே இந்த நிலைமையா? ஒருத்தர் கூட இல்லயா: மனம் திறந்து பேசிய அர்ஜூன் டெண்டுல்கர்!
Related image2
சச்சின் சொன்ன 'அந்த' அட்வைஸ்.. சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்ப கைகொடுத்த கிரிக்கெட்டின் கடவுள்!
33
பஞ்சாப் அணி வெற்றி
Image Credit : ANI

பஞ்சாப் அணி வெற்றி

முன்னதாக இந்த போட்டியில் பஞ்சாப் அணி லக்னோவை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ ஜோஷ் இங்லிஸ் (44 பந்துகளில் 72 ரன்கள்), ஆயுஷ் பதோனி (18 பந்துகளில் 43 ரன்கள்), மற்றும் அப்துல் சமத் (20 பந்துகளில் 37* ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் (2/25) மற்றும் மார்கோ ஜான்சன் (2/33) சிறப்பாக பந்துவீசினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (51 பந்துகளில் 101*) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (39 பந்துகளில் 69) ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில், இன்னும் இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும்போதே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தங்களது தொடர்ச்சியான ஆறு தோல்விகளுக்கு பஞ்சாப் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சச்சின் டெண்டுல்கர்
ஐபிஎல்
பஞ்சாப் கிங்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
15 வயதிலேயே மாஸ் சம்பவம்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
Recommended image2
வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர் வீரர்கள் வார்னிங்.. இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?
Recommended image3
இந்த 4 வீரர்களுக்கும் இந்த கெட்ட பழக்கம் இருக்கா! கேமராவில் வசமாக சிக்கிய தருணங்கள்
Related Stories
Recommended image1
ஜாம்பவான் சச்சின் மகனுக்கே இந்த நிலைமையா? ஒருத்தர் கூட இல்லயா: மனம் திறந்து பேசிய அர்ஜூன் டெண்டுல்கர்!
Recommended image2
சச்சின் சொன்ன 'அந்த' அட்வைஸ்.. சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்ப கைகொடுத்த கிரிக்கெட்டின் கடவுள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved