- Home
- Sports
- Sports Cricket
- விராட் கோலி, ரோகித்துக்கு ஆபத்தா? பிசிசிஐயின் புதிய விதியால் ரசிகர்களுக்கு ஷாக்!
விராட் கோலி, ரோகித்துக்கு ஆபத்தா? பிசிசிஐயின் புதிய விதியால் ரசிகர்களுக்கு ஷாக்!
BCCI: வீரர்களுக்கான வருடாந்திர சென்ட்ரல் கான்ட்ராக்ட் விதிமுறைகளில் பெரிய மாற்றத்தை பிசிசிஐ கொண்டு வர உள்ளது. இது ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு இது பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ரோகித், விராட் கோலிக்கு பாதிப்பு?
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு பெரிய புயல் கிளம்பியுள்ளது. பிசிசிஐ ஒரு முக்கியமான விதியை மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்தால், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
பிசிசிஐயின் புதிய விதி என்ன?
அதாவது பிசிசிஐ வீரர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர சென்ட்ரல் கான்ட்ராக்ட் விதிமுறைகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உள்ளது. இதுவரை, வீரர்களின் சீனியாரிட்டி, அனுபவம் மற்றும் பிராண்ட் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கான்ட்ராக்ட் கிரேடுகள் (A+, A, B, C) வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது, 'போட்டிக்கான அவைலபிள் (Match Availability) மற்றும் 'வீரர்களின் ஃபிட்னஸ்' ஆகியவற்றை முக்கிய நிபந்தனையாகக் கருத BCCI தயாராகி வருகிறது. எளிமையாகச் சொன்னால், ஒரு வீரர் ஒரு சீசனில் எத்தனை போட்டிகளில் ஃபிட்டாக இருந்து அணிக்குக் கிடைக்கிறார் என்பதைப் பொறுத்துதான் அவருக்கு வருடாந்திர ஒப்பந்தம் வழங்கப்படும்.
இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
கடந்த சில மாதங்களாக, இந்திய அணியின் முக்கிய வீரர்கள் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு, முக்கியமான சர்வதேச தொடர்கள் மற்றும் போட்டிகளில் இருந்து விலகி வருகின்றனர். இதை சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ள வாரியம், வீரர்கள் தேசிய அணிக்காக முடிந்தவரை அதிக போட்டிகளில் விளையாடுவது கட்டாயம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறது. இதன் பின்னணியில், ஒப்பந்தத்தைத் தக்கவைத்துக் கொள்ள அல்லது உயர் கிரேடு பெற, ஒரு வீரர் ஒரு சீசனில் விளையாட வேண்டிய 'குறைந்தபட்ச போட்டிகளின் எண்ணிக்கை' என்ற அளவுகோலை நிர்ணயிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஏன் பெரிய அதிர்ச்சி?
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், அதன் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொள்ளப் போவது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிதான். இந்த இரண்டு ஜாம்பவான்களுமே சில ஃபார்மட்களில் இருந்து விலகி, ஒரு வருடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2-3 முக்கிய தொடர்களில் மட்டுமே களமிறங்குகின்றனர். ஒரு சீசனில் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பிசிசிஐ நிர்ணயிக்கப் போகும் 'குறைந்தபட்ச போட்டிகள்' என்ற நிபந்தனையை இவர்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம்.
ரசிகர்கள் கவலை
பிசிசிஐ தற்போது இந்த கடுமையான விதியின் இறுதி வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஒருவேளை இந்த விதி அமலுக்கு வந்தால், சீனியாரிட்டி அடிப்படையில் உயர் கிரேடு ஒப்பந்தம் பெற்று வந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, சென்ட்ரல் கான்ட்ராக்ட்டில் கீழ் கிரேடுக்கு தள்ளப்படலாம் அல்லது ஒப்பந்தத்தில் இருந்தே வெளியேறும் அபாயமும் உள்ளது. டெல்லி T20 போட்டிக்கு முன்னதாக வெளியான இந்த செய்தி, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

