IPL 2023: டி20 கிரிக்கெட் வரலாற்றில் 3வது வீரர்..! ஆண்ட்ரே ரசல் மெகா சாதனை
டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய 3வது வீரர் என்ற சாதனையை ஆண்ட்ரே ரசல் படைத்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பில்லாத கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. ஹைதராபாத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது.
கேகேஆர் அணியில் ரிங்கு சிங்(46), நிதிஷ் ராணா(42) ஆகிய இருவரும் நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆண்ட்ரே ரசல் 15 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது கேகேஆர் அணி. 172 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் அணி விரட்டிவருகிறது.
IPL 2023: கோலி, கோலி என முழங்கி மண்டை சூடேற்றிய ரசிகர்களை முறைத்த கம்பீர்..! வைரல் வீடியோ
இந்த போட்டியில் அடித்த 2 சிக்ஸர்களின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டிய 3வது வீரர் என்ற சாதனையை ஆண்ட்ரே ரசல் படைத்துள்ளார். ஐபிஎல்லில் 188 சிக்ஸர்களை விளாசியுள்ள ரசல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 62 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். எஞ்சிய சிக்ஸர்கள் அனைத்தையும் டி20 லீக் தொடர்களில் தான் அடித்துள்ளார். இந்த மைல்கல்லை விரைவில் எட்டிய வீரரும் இவரே.
IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்..! பஞ்சாப்பை வைத்து தரமான சம்பவம்
இதற்கு முன் கிறிஸ் கெய்ல் மற்றும் கைரன் பொல்லார்டு ஆகிய இருவரும் டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்கள் அடித்த 3 வீரர்களுமே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைத்துவிதமான டி20 லீக் தொடர்களிலும் ஆடுவதுதான் அதிகமான சிக்ஸர்களை விளாசியிருப்பதற்கு காரணம்.