பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை!
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் வாரத்திலேயே மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பள்ளிகள் திறப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. கோடை வெயில் கடுமையான சுட்டெரித்து வந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் எப்போது ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை மே மாதம் இறுதியில் தொடங்கியதால் நீலகிரி, கோவை, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழல் நிலவியது மட்டுமல்லாமல் வெயிலும் குறைந்து காணப்பட்டது. இதனால் திட்டமிட்டப்படி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரண்டு நாட்கள் விடுமுறை
என்னதான் மாதக்கணக்கில் விடுமுறை கொண்டாடினாலும் அடுத்த முறை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் இருப்பது வழக்கம். அதுமட்டுமல்லாமல் அரசு விடுமுறை எப்போது வருகிறது என்பது தொடர்பாக காலாண்டரை புரட்டி பார்ப்பார்கள். இந்நிலையில் பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே இரண்டு நாட்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு மனசு வைத்தால் 4 நாட்கள் விடுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்
அதாவது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிக்கு இன்று மற்றும் நாளை ஜூன் 6ம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாறு கோவில் திருத்தேரோட்டம்
அதேபோல் நாளை புகழ் பெற்ற திருநள்ளாறு கோவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்றைய தினமும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14 மற்றும் 21ம் தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்.
4 நாட்கள் விடுமுறை கிடைக்குமா?
புதுச்சேரி அரசு நினைத்தால் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் பள்ளி விடுமுறையாகிவிடுகிறது. ஏற்கனவே இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.