சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணிநேரம்? இதோ முழு விவரம்!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். சித்தாலப்பாக்கம், மாடம்பாக்கம், கோவூர், கொரட்டூர், ரெட் ஹில்ஸ், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்பது உண்டு. அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியவில்லை.
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சித்தாலப்பாக்கம்
டிஎன்எச்பி காலனி, மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியா தர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, வள்ளுவர் நகர், ஜெயா நகர், விவேகானந்தா நகர்.
மாடம்பாக்கம்
இந்திரா நகர் சாந்தி நிகேதன் காலனி, தம்பையா ரெட்டி காலனி, பார்வதி நகர் வடக்கு, காமாட்சி நகர், பாலாஜி நகர், கற்பகம் நகர், ஏபிஎன் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா கார்டன், சீனிவாசா நகர், ரமணா நகர், மாருதி நகர், அண்ணாநகர் மாடம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கோவூர்
தண்டலம், ஆகாஷ் நகர், கெருகம்பாக்கம், மணிமேடு, தாரபாக்கம், சிபி கார்டன், பாரதியார் தெரு அம்பாள் நகர், ரோஸ் கார்டன், வணிகர் தெரு.
கொரட்டூர்
ரெட்டி தெரு, பாரதி நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, திருமுல்லைவாயல் ரோடு, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு ரோடு, எம்டிஎச் ரோடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
ரெட் ஹில்ஸ்
சோத்துபெரும்பேடு பகுதி, காரனோடை, முனிவேல் நகர், ஆத்தூர், தேவனேரி, பஸ்தாபாளையம், விஜிபி மேடு பகுதி முழுவதும்.
அம்பத்தூர்
மில்லினியம் டவுன் ஃபேஸ் I, II & III, பார்க் ரோடு, யுஆர் நகர், பாலாஜி நகர், குப்புசாமி தெரு, ஜெமி காம்பவுண்ட், கலெக்டர் நகர், எம்எம்எம் மருத்துவமனை, எஸ்எம் நாராயணன் நகர், ராம் நகர், கலைவாணர் காலனி, 11 கேவி பம்பிங் ஸ்டேஷன், எச்டி சர்வீஸ், வடக்கு அவென்யூ ரோடு, கொரட்டூர் ரயில்வே, ஸ்டேஷன் முன்பதிவு அலுவலகம், கொரட்டூர் 26வது தெரு வரை பேருந்து நிலையம். துரைசாமி 1 மற்றும் 2வது தெரு, தனபால் செட்டி 1 மற்றும் 2வது தெரு, ரயில் நிலைய சாலை, VOC 1 முதல் 2வது தெரு மற்றும் லட்சுமி முதலை 1 முதல் 3வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.