- Home
- Tamil Nadu News
- Puducherry
- விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை..! கெஞ்சிப் பார்த்த தவெகவினர்..! கையை விரித்த புதுவை முதல்வர்!
விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை..! கெஞ்சிப் பார்த்த தவெகவினர்..! கையை விரித்த புதுவை முதல்வர்!
புதுச்சேரியில் விஜய் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை இல்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. தவெகவினர் பலமுறை கேட்டும் புதுவை முதல்வர் ரங்கசாமி அனுமதி மறுத்துள்ளார்.

புதுவைக்கு செல்லும் விஜய்
தவெக தலைவர் விஜய் வரும் 5ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்காக தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜூனா ஆகியோர் புதுவை காவல்துறையை சந்தித்து அனுமதி கேட்டனர்.
மேலும் சுமார் மூண்று முறை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் கரூரில் 41 பேர் பலியானதை தொடர்ந்து புதுவை அரசு விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி அளிக்காது என்றே தகவல்கள் வெளியாகி வந்தன.
ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்ட தவெக
''புதுவையில் தமிழகத்தை போன்று அகலமான சாலைகள் கிடையாது. ஆகவே விஜய் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ளலாம்'' என்று புதுச்சேரி சபாநாயகர் தெரிவித்து இருந்தார். இதற்கிடையே விஜய் ரோடு ஷோவிற்கு தவெகவினர் அனுமதி கேட்டது தொடர்பாக டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சத்தியசுந்தரம் புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை என்று அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக பேசிய சத்தியசுந்தரம், ''புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை. விஜய் வேண்டுமானால் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம்'' என்று தெவித்தார்.
தவெகவினர் பலமுறை கெஞ்சிப் பார்த்தும் ரோடு ஷோவுக்கு புதுவை முதல்வர் அனுமதி கொடுக்காதது விஜய்யையும், தவெகவினரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் யாரும் ரோடு ஷோ நடத்தக் கூடாது
கரூர் சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் ரோடு ஷோ நடத்த தடை விதித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இதன் காரணமாக கட்சி தொடங்கியபிறகு முதன் முறையாக புதுவை செல்லும் விஜய் அங்கு ரோடு ஷோ நடத்தி கெத்து காண்பிக்கலாம் என திட்டமிட்டு இருந்தார். ஆனால் கரூரை போல் அசாம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு அனைவரும் எதிர்பார்த்தப்படி புதுவை அரசு விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்துள்ளது.

