மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்த ஓபிஎஸ்.! ஈபிஎஸ், டிடிவி தினகரன் ஷாக்
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். இது அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சி முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் மூத்த தலைவராகவும், முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வம், அதிகார மோதல் காரணாமக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து பல கட்ட சட்ட போராட்டங்கள் நடத்தியும் வந்தார். ஆனால் எந்த விதி சாதகமான நிலையும் நீடிக்காத நிலையே இருந்தது. இந்த நிலையில் தான் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பிடித்த ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது அதிமுகவை 3ஆம் இடத்திற்கு தள்ளி 2வது இடத்தை சுயேட்சை சின்னம் மூலம் பெற்றார் ஓ.பன்னீர் செல்வம், இதனையடுத்து வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் அதிமுக- பாஜகவுடன் மீண்டும் இணைந்தது. இதனால் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். பாஜகவின் மத்திய தலைமை ஓபிஎஸ் மற்றும் அவரது அணியை தொடர்ந்து புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தபோது, ஓபிஎஸ்ஸை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது, இது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது
ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள், குறிப்பாக அவரது "தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு," பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர் மேற்கொண்ட போராட்டத்திற்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையின் பேரில் நடந்ததாகவும், ஆனால் இறுதியில் பாஜக இபிஎஸ்ஸை ஆதரித்து ஓபிஎஸ்ஸை புறக்கணித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்தார்.
ந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறினார். அப்போது பாஜக மாநில தலைமை தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லையென டிடிவி தினகரன் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்.
இந்த சூழ்நிலையில் டிடிவி மற்றும் ஓபிஎஸ் நடிகர் விஜய்யின் தவெக அணியோடு கூட்டணி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் ரகசியமாக தொடங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பாஜகவிற்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி (INDIA)சார்பில் பி. சுதர்சன் ரெட்டி போட்டியில் உள்ளார். எனவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு எம்பி யாருக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு மாநிலங்களவை எம்பி தர்மர் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணணுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் அறிவுறுத்தியதன் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு தாம் வாக்களித்ததாக தர்மர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்டாலும் மத்தியில் பாஜகவிற்கு ஆதரவாகவே ஓபிஎஸ் செயல்பட்டு வருவதாக தற்போது உறுதியாகியுள்ளது.