ஜெ பாணியில் பிரச்சாரம்.. விஜய் எடுத்த கடைசி அஸ்திரம்.. அப்போ தவெக நிர்வாகிகள் கதி.?
நடிகர் விஜய், தனது தமிழக வெற்றி கழகத்திற்காக 2026 தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். கரூரில் நடந்த சோக சம்பவத்திற்குப் பிறகு, மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளார்.

விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் விஜய். பாக்ஸ் ஆபிஸ் வசூலை வேட்டையாடும் விஜய், அரசியலில் எப்படி ஜொலிப்பார் என்ற கேள்வி இருந்தது. தனது தமிழக வெற்றிக்கு கழகத்தின் முதல் மாநாட்டில் ஓவர் ஹைப்பை ஏற்றி, தமிழகத்தின் முன்னணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தார் விஜய். கரூர் பிரச்சார நெரிசல் மரண சம்பவத்துக்கு பிறகு தவெக நிலைமை தலைகீழானது. இந்த நிலைமையில் மீண்டும் களத்துக்கு வரவேண்டிய கட்டாயத்தில் தவெக தலைவர் விஜய் இருக்கிறார். விஜய் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் களப்பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளனர்.
ஜெயலலிதா பாணி அரசியல்
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி 2026 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரங்களை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் விஜய் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில், அவர் ஹெலிகாப்டர் மூலம் பிரச்சாரம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம், நேரத்தைச் சேமித்து தமிழகம் முழுவதும் விரைவாக பிரசாரத்தை மேற்கொள்ள முடியும் என தவெக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்திற்கு 4 ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு, முக்கிய பிரசார இடங்களுக்கு பயணம் செய்ய பயன்படும்.
தவெகவுக்கு ஏற்பட்ட அழுத்தம்
கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த துக்கமான சம்பவம், பிரச்சார திட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய நிலை உருவாகியது. இதனால், விஜய் மற்றும் தவெக கட்சி நிர்வாகிகள், இனிமேல் பிரச்சாரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அதிகரித்துள்ளது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள், அவரின் அணுகுமுறையை மதித்து, பிரச்சார திட்டங்களில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டியது அவசியம். தவெகவில் திமுக, அதிமுக போன்று 2ம் கட்ட, 3ம் கட்ட தலைவர்கள் நியமிக்காதது இப்படியொரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
விஜயின் புதிய பிரச்சார வியூகம்
இதன்படி, பிரச்சாரங்கள் தற்போது சாலை வழியாக நடக்காமல், ஹெலிகாப்டர் மற்றும் பாதுகாப்பு வாகனங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட உள்ளன. இந்த நடைமுறை, விஜயின் பிரச்சாரத்தை மேலும் விளைவாக, பாதுகாப்பாகவும் மாற்றும் ஒரு புதிய முறையாகும். இது பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும் தரும் என்று கூறலாம். தவெக கட்சி தலைமை எடுத்துள்ள இந்த நடவடிக்கை எப்படி களத்தில் மாற்றத்தில் ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.