MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஆகஸ்ட் 20ஆம் தேதியை குறி வைக்கும் அரசியல் கட்சிகள்..! ஒரே நாளில் களத்தில் இறங்கும் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ்

ஆகஸ்ட் 20ஆம் தேதியை குறி வைக்கும் அரசியல் கட்சிகள்..! ஒரே நாளில் களத்தில் இறங்கும் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ்

தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு, திமுக உண்ணாவிரதப்போராட்டம், ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அண்ணாமலை நடை பயணம் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

2 Min read
Author : Ajmal Khan
Published : Aug 17 2023, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக - அதிமுக- பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை அகற்றப்பட்டு ஒற்றை தலைமையானது கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அதிமுக மாநாடு - ஏற்பாடுகள் தீவிரம்

இந்தநிலையில் தனது அதிகாரத்தையும் தனது செல்வாக்கையும் தொண்டர்களுக்கு மட்டுமில்லாமல் எதிர்கட்சிகளுக்கு காட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதிமுக மாநில மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். சுமார் 4 மாத காலத்திற்கு முன்பே ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளை அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சுமார் 10 லட்சம் பேரை ஒரே இடத்தில் திரட்டும் வகையில் பிரம்மாண்டமாக பணியானது நடைபெறுகிறது.

34

ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் கூட்டம்

இந்தநிலையில் எடப்பாடி அணிக்கு டப் கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வமும் அதே ஆகஸ்ட் 20 ஆம் தேதியை குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளார். முன்னதாக கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக கோவையில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிருந்தார். ஆனால் அந்த தேதியில் சென்னையில் தங்கள் அணியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் அப்போது முக்கிய முடிவு வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

44

உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு

இதே தேதியில் திமுகவும் போட்டியில் இறங்கியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ள நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. நீட் தேர்வு தோல்வி காரணமாக மகன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவினர் சார்பாக உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதியை குறிவைத்து ஒருவருக்கு ஒருவர் போட்டியாக முக்கிய அரசியல் கட்சிகள் களம் இறங்குவது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் படியுங்கள்

அதிமுக மாநாட்டிற்கு பயந்து திமுக போராட்டம் .! நீட் விவகாரத்தில் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்- விளாசும் இபிஎஸ்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
அரசியல்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved