MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sai Pallavi Skincare: சாய் பல்லவி மாதிரி பளபள சருமம் வேணுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்

Sai Pallavi Skincare: சாய் பல்லவி மாதிரி பளபள சருமம் வேணுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்

நடிகை சாய் பல்லவி போல பளபளப்பான சருமம் வேண்டுமா? அது ரொம்ப ரொம்ப ஈசிங்க.! அந்த நேச்சுரல் அழகிற்கு அவர் பின்பற்றும் எளிய ரகசியங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இனி நீங்களும் ஹரோயின்தான்.!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 23 2026, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சாய்பல்லவி சொல்லத்தரும் ரகசியம்
Image Credit : instagram

சாய்பல்லவி சொல்லத்தரும் ரகசியம்

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சாய் பல்லவி, நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார். மேக்கப் இல்லாமல்கூட இயற்கையான அழகால் அனைவரையும் ஈர்க்கும் அவரது ஃப்ரெஷ்ஷான, பளபளப்பான சருமம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவரது ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, இயற்கை பராமரிப்பு மற்றும் எளிய பழக்கவழக்கங்களே இந்த அழகின் ரகசியம். அந்த இயற்கை பொலிவுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய அழகுப் பராமரிப்பு ரகசியங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சாம்பாடு முக்கியம் பாஸ்.!
Image Credit : instagram

சாம்பாடு முக்கியம் பாஸ்.!

சாய் பல்லவி தனது தினசரி வாழ்க்கையில் எளிமையான, சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார். அதிக எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுவதாக கூறியுள்ளார். ஒரு பேட்டியில், "நான் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறேன். அது என் அழகை பராமரிப்பதோடு, உடலின் உள்ளேயும் வெளியேயும் இயற்கையான பொலிவைத் தருகிறது" என்று தெரிவித்துள்ளார். சீரான உணவுப் பழக்கமே அவரது ஆரோக்கியம் மற்றும் இயற்கை அழகின் முக்கிய ரகசியங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

35
இயற்கை உங்களை மேலும் அழகாக்கும்
Image Credit : instagram

இயற்கை உங்களை மேலும் அழகாக்கும்

சாய் பல்லவி தனது முடி மற்றும் சருமப் பராமரிப்பில் இயற்கை முறைகளுக்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார். ஷாம்பூ, சோப் போன்ற அதிக கெமிக்கல் கலந்த பொருட்களைத் தவிர்த்து, இயற்கை மூலிகைகள் மற்றும் பாரம்பரிய பொருட்களைப் பயன்படுத்துவதை விரும்புகிறார். மேலும், திரைப்படங்களுக்காக கூட முடிக்கு ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்த்து, தனது இயற்கையான முடித் தோற்றத்திலேயே நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இயற்கையை நம்பும் இந்த வாழ்க்கைமுறையே அவரது ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தின் முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

45
இதுதான் முக்கியமான ரகசியம்
Image Credit : instagram

இதுதான் முக்கியமான ரகசியம்

சாய் பல்லவி தனது உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும், எப்போதும் எனர்ஜியுடனும் வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். யோகா, எளிய உடற்பயிற்சிகள் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் உடல் வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் பராமரிக்கிறார். உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாகவும், பாசிட்டிவாகவும் வைத்திருக்க உதவுகிறது என்றும் அவர் நம்புகிறார். அதனால் உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதே அவரது வாழ்க்கை முறையின் முக்கிய அம்சமாக உள்ளது.

55
தண்ணீர் தண்ணீர்
Image Credit : instagram

தண்ணீர் தண்ணீர்

சாய் பல்லவியின் இயற்கை அழகுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய ரகசியங்களில் ஒன்று போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம். தினமும் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்கும். இதனால் சருமம் வறட்சி அடையாமல், இயற்கையான பொலிவு மற்றும் நெகிழ்வுத்தன்மையை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்ள முடியும். உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறவும், செரிமானம் சீராக இயங்கவும் தண்ணீர் உதவுகிறது. இதன் காரணமாக முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சத்தான உணவு மற்றும் போதுமான தண்ணீர் ஆகியவற்றின் இணைப்பே தனது அழகைப் பாதுகாக்கும் அடிப்படை என்று சாய் பல்லவி நம்புவதாகக் கூறப்படுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
சினிமா காட்சியகம்
சினிமா
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
DMart Shopping Tips: மாதம் ரூ.5,000 மளிகைச் செலவா? டிமார்ட்டில் இப்படி வாங்கினால் ரூ.2,500 மிச்சமாகுமா? யாரும் சொல்லாத ஷாப்பிங் டிப்ஸ்!
Recommended image2
Pressure Cooker: ஒரே குக்கரை ரொம்ப நாள் யூஸ் பண்றீங்களா? உடனே மாத்துங்க.. ஏன் தெரியுமா?
Recommended image3
Chennai Budget Shopping: டிமார்ட், ஜியோமார்ட் மட்டுமல்ல! சென்னையில் இந்த சந்தைகளுக்குப் போங்க… குறைந்த விலையில் அள்ளிக்கிட்டு வரலாம்!
Related Stories
Recommended image1
Skin Care: வைட்டமின் சி சீரம் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்குமா? உண்மை என்ன?
Recommended image2
Skin Care வெயிலால் தோல் அலர்ஜியா? சமையலறையில் இருக்கும் இந்த 5 பொருட்கள் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved