MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mental Health: ராத்திரி ஆனா மட்டும் ஏன் மனசு பாரமா இருக்கு? சைக்காலஜி சொல்லும் காரணங்கள்.!

Mental Health: ராத்திரி ஆனா மட்டும் ஏன் மனசு பாரமா இருக்கு? சைக்காலஜி சொல்லும் காரணங்கள்.!

Mental Health: பலருக்கும் ராத்திரி நேரத்துல மனசு ரொம்ப பாரமாகிடும். சின்ன சின்ன விஷயமெல்லாம் பெருசா தெரியும். கடந்த காலம், எதிர்கால பயம்னு எல்லாம் சேர்ந்து அழுத்தும். இதுக்கு பின்னாடி இருக்கிற உளவியல் காரணங்கள் என்னன்னு பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 25 2026, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Mental Health   இரவில் ஏன் அதிக உணர்ச்சிவசப்படுகிறோம் என்பதற்கான காரணங்கள்
Image Credit : AI

Mental Health - இரவில் ஏன் அதிக உணர்ச்சிவசப்படுகிறோம் என்பதற்கான காரணங்கள்

பகல் நேரத்துல சாதாரணமாக தெரியும் பிரச்சனைகள் கூட, ராத்திரி படுக்கப் போகும்போது பூதாகரமாக தெரியும். சின்ன விஷயத்துக்குக் கூட கவலை, பழைய நினைவுகள், தனிமை உணர்வுனு எல்லாம் சேர்ந்து மனசை போட்டு அழுத்தும். இது வெறும் கற்பனை இல்லை, இதுக்கு பின்னாடி சில உளவியல் காரணங்கள் இருக்கு. அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

இதையும் படியுங்கள் - Train: ரயில் ‘சந்திப்பு’ vs ‘முனையம்’.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மன சோர்வு காரணமாக
Image Credit : Getty

மன சோர்வு காரணமாக

நம்ம மூளையில 'ப்ரீஃபிரான்டல் கார்டெக்ஸ்' (prefrontal cortex)னு ஒரு பகுதி இருக்கு. இதுதான் நம்ம உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துது. நாள் முழுக்க வேலை, மன அழுத்தம், முடிவுகள் எடுக்குறதுனு இது ரொம்பவே சோர்ந்து போயிடும். இதனால, ராத்திரியில உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் குறைஞ்சு, சின்ன விஷயமும் பெருசா தெரியும்.

இதையும் படியுங்கள் - Milk: பசும்பால் vs எருமை பால்.! குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

36
உள் எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள்
Image Credit : stockPhoto

உள் எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள்

ராத்திரி நேரத்துல வெளியுலகம் அமைதியாகிடும். போன் கால், வேலை, குடும்பப் பொறுப்புனு பகல் நேர கவனச்சிதறல்கள் இருக்காது. அப்போ நம்ம மூளை, உள்மன சிந்தனைகள்ல கவனம் செலுத்த ஆரம்பிக்கும். இந்த நேரத்துல பழைய நினைவுகள், தோல்விகள், எதிர்காலத்தைப் பற்றிய பயம்னு மனசுக்குள்ள ஓட ஆரம்பிக்கும். இதனால கவலை, மன அழுத்தம் அதிகமாகும்.

இதையும் படியுங்கள் - Mineral Water vs Bore Water: மினரல் வாட்டரா? போர் வாட்டரா? உடம்புக்கு எது நல்லது? எது பெஸ்ட்?

46
தூக்கப் பிரச்சினைகள் காரணமாக
Image Credit : Getty

தூக்கப் பிரச்சினைகள் காரணமாக

நம்ம உடம்பு 'பயாலஜிக்கல் கிளாக்' (biological clock) அடிப்படையிலதான் இயங்குது. இது தூக்கம், ஹார்மோன் சுரப்பு போன்றவற்றை கட்டுப்படுத்துது. ராத்திரி நேரத்துல 'மெலடோனின்' (melatonin) ஹார்மோன் சுரந்து, உடம்பை ஓய்வுக்குத் தயார்படுத்தும். ஆனா, சரியா தூக்கம் இல்லைனா, இந்த உணர்ச்சிகள் இன்னும் தீவிரமாக தெரியும்னு ஆய்வுகள் சொல்லுது.

இதையும் படியுங்கள் - Tiffin vs Breakfast: டிபன், பிரேக்ஃபாஸ்ட் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? பலருக்கும் தெரியாத தகவல்.!

56
தனிமையும் கூட..
Image Credit : StockPhoto

தனிமையும் கூட..

தனிமையில் இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் ஒரு இழப்பைச் சந்தித்தவர்கள் ராத்திரியில் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள். பகலில் மற்றவர்களுடன் பேச வாய்ப்பு இருக்கும், ஆனால் இரவில் அந்த வாய்ப்பு இல்லாததால் மனசுல ஒருவித வெற்றிடம் உருவாகி, உணர்ச்சிகள் அதிகமாகும். அதேபோல, மொபைல் அதிகம் பயன்படுத்துவதும், அடுத்தவர் வாழ்க்கையோடு ஒப்பிடுவதும் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள் - Name Numerology: உங்க கல்யாணம் சீக்கிரம் நடக்குமா? லேட்டா நடக்குமா? பிறந்த தேதியே வச்சே கண்டுபிடிக்கலாம் வாங்க.!

66
எப்படி வெளியேறுவது?
Image Credit : AI Generated

எப்படி வெளியேறுவது?

தினமும் ஒரே நேரத்துக்குத் தூங்குவது, தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி மொபைல் பார்க்காம இருப்பது, மனசுல தோன்றுவதை டைரியில் எழுதுவது, தியானம் செய்வது, சாயங்காலத்துக்குப் பிறகு காபி, டீ குறைப்பது, நம்பிக்கையான ஒருவரிடம் பேசுவது போன்ற பழக்கங்கள் மன அமைதியைக் கொடுக்கும்னு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
மனநலம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Marriage Registration : திருமணத்தைப் பதிவு செய்யவில்லையா? பின்னாளில் இந்த சிக்கல்கள் வரலாம்!
Recommended image2
DMart Shopping Tips: மாதம் ரூ.5,000 மளிகைச் செலவா? டிமார்ட்டில் இப்படி வாங்கினால் ரூ.2,500 மிச்சமாகுமா? யாரும் சொல்லாத ஷாப்பிங் டிப்ஸ்!
Recommended image3
Pressure Cooker: ஒரே குக்கரை ரொம்ப நாள் யூஸ் பண்றீங்களா? உடனே மாத்துங்க.. ஏன் தெரியுமா?
Related Stories
Recommended image1
Fun Fact: வார்ட்ரோப், கப்போர்டு, க்ளோசெட்.! இதெற்கெல்லாம் உள்ள வேறுபாடுகள் உங்களுக்குத் தெரியுமா?
Recommended image2
Train: ரயில் ‘சந்திப்பு’ vs ‘முனையம்’.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved