MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வாக்கிங் முதுகு வலிக்கு நிவாரணம்! எத்தனை நிமிஷம் நடக்கனும் தெரியுமா?

வாக்கிங் முதுகு வலிக்கு நிவாரணம்! எத்தனை நிமிஷம் நடக்கனும் தெரியுமா?

Walking For Back Pain : தினமும் நடைபயிற்சி செய்தால் முதுகு வலியில் இருந்து விடுபடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 14 2025, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
walking health benefits in tamil

walking health benefits in tamil

நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் என்பது நாம் அறிந்தது. ஆனால் தினமும் நடப்பவர்களுக்கு முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாதது.  ஒருவர் நாள்தோறும் நடக்கும்போது அவருடைய தசைகள், மூட்டுகள் வலுவாகிறது. தொடர்ந்து நடைபயிற்சி செய்தால் முதுகு வலி குறையும் என நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். இந்த பதிவில் நடைபயிற்சி முதுகு வலிக்கு எவ்வாறு தீர்வளிக்கிறது என்பதை காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Walking for back pain in tamil

Walking for back pain in tamil

நிபுணர்கள் பரிந்துரை

நடைபயிற்சி செய்பவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தொடர்ந்து நடப்பவர்களுக்கு முதுகு வலி குறைவதாகவும், மருத்துவரை நாடும் தேவை குறைவதாகவும் தெரிவித்துள்ளனர். நடக்கத் தொடங்கிய பின்னர் முதுகு வலியால் அவர்கள் அவதிப்படுவதும் குறைந்துள்ளது. உங்களுக்கு கீழ் முதுகு வலி இருந்தால் வெறும் நடைபயிற்சி மட்டுமே போதும். அதுவே நல்ல சிகிச்சையாக அமையும் என  நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

35
How walking cures back pain in tamil

How walking cures back pain in tamil

முதுகு வலி நிவாரணம்

நடைபயிற்சி உங்களுடைய உடல் தசைகளை வலுவாக்குகிறது. நடக்கும்போது உடலின் மையம் (core) நன்கு இயங்குகிறது. அங்கு சமமான அழுத்தத்தை வழங்குகிறது. உங்களுடைய உடலின் மையத்தில் இறுக்கமான தசைகள் ஓய்விலும், தளர்வான தசைகள் இயங்கவும் நடைபயிற்சி உதவுகிறது. முதுகெலும்புடன் தொடர்புள்ள தசைகளை வலுவாக்கவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் அதன் மீது செயல்படவும் நடைபயிற்சி  உதவுகிறது. இதனால் முதுகில் உள்ள வலி குறைகிறது. 

இதையும் படிங்க: வாக்கிங் மூளையை பாதிக்குமா? இந்த 'ட்விஸ்ட்' யாருக்கும் தெரியாது!! 

45
Benefits of walking for back pain in tamil

Benefits of walking for back pain in tamil

எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? 

அதிக நேரம் நடக்க வேண்டிய கட்டாயம் இல்லை. குறுநடை போதுமானது. குறைந்தது 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை நடக்கலாம். இதற்கு மேல் நடக்க தெம்பிருந்தால் 30 நிமிடங்கள் வரை கூட நடைப்பயிற்சியைத் தொடரலாம். உங்களால் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு நடங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த  கால அளவை அதிகரிக்கலாம். ஒரே நாளில் இமயமலைதை தொடமுடியாது.  

இதையும் படிங்க:  வெறும் '5' நிமிஷம் வாக்கிங்க்கு இவ்ளோ பவரா? என்னென்ன நன்மைகள்??

55
Walking exercises for back pain in tamil

Walking exercises for back pain in tamil

நடைபயிற்சியில் கவனிக்க வேண்டியது? 

நடைபயிற்சி செய்யும் போது சரியான தோரணையை வைத்து கொள்ள வேண்டும். தோள்கள் தளர்வாகவும், நிமிர்ந்த தோற்றத்தில் உடலை வைத்து முன்னோக்கி பார்த்து நடக்க வேண்டும். தரையை பார்த்து நடக்கக் கூடாது. இடுப்பு தசைகளை நடுநிலையாக வைக்க வேண்டும். இதுவே நடப்பதற்கான சரியான முறை. உங்களுக்கு ரொம்ப காலமாக முதுகுவலி இருந்தால் வாரத்தின் 5 நாட்களில் 30 முதல் 60 நிமிடங்கள் நடக்க வேண்டும். நீங்கள் தினமும் நடந்தால் உடலுக்கு சகிப்புத்தன்மை அதிகமாகும். முதுகு வலியும் குறையும். மனநிலையை சீராக்கி மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும்.  உடலின் பாதி வியாதிகள் மனநிலை காரணமானதுதான். மன ஆரோக்கியத்தை சரி செய்யும் போது உடலும் ஆரோக்கியமாகும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Peanut Katli: வீட்டில் வேர்கடலை இருக்கா? கடையில் வாங்கும் காஜூ கட்லியை மிஞ்சும் சுவையில் ஒரு ஸ்வீட்
Recommended image2
முதல்ல கண்ணுல பட்டது எது? உங்க மூளை எப்படி வேலை செய்யுதுன்னு அச்சுப்பிசகாம உடைக்கும் வைரல் ஆப்டிகல் இல்யூஷன்!
Recommended image3
வேலை முடிந்து கண்கள் எரிகிறதா? ஆபத்தான நோயின் அறிகுறி; தப்பிக்க மருத்துவர்கள் சொல்லும் 4 வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved