- Home
- Lifestyle
- Mullu Seetha Fruit : கொடூரமான புற்றுநோயை கூட தடுக்கும் ஆற்றல்!! எண்ணற்ற நன்மைகள்; முள் சீத்தாப்பழம் பத்தி தெரியுமா?
Mullu Seetha Fruit : கொடூரமான புற்றுநோயை கூட தடுக்கும் ஆற்றல்!! எண்ணற்ற நன்மைகள்; முள் சீத்தாப்பழம் பத்தி தெரியுமா?
முள் சீத்தாப்பழம் 12 வகையான புற்றுநோய்களை தடுப்பதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் செய்யக் கூடியது.

நம்மில் பலருக்கு சீத்தாப்பழம் தெரியும். ஆனால் முள் சீத்தா பற்றி தெரியாது. கோடைக் காலங்களில் பரவலாக கிடைக்கும் இந்த முள் சீதாப்பழத்தில் பல்வேறு சத்துகள் காணப்படுகின்றன. பச்சை நிறத்தில் இருக்கும் இந்த பழம் வெளிப்புறத்தில் முட்கள் காணப்படும். தடிமனான தோல் கொண்ட இந்தப் பழத்தை இயற்கையான கீமோதெரபி எனச் சொல்கிறார்கள். ஏனென்றால் புற்றுநோயாளிகளுக்கு இது மிகுந்த பலனளிக்கிறது. பொதுவாக கீமோதெரபி புற்றுநோயாளிகளுக்கு தான் கொடுப்பார்கள். ஆனால் முள் சீதாப்பழம், அதன் இலைகளை சாப்பிட்டால் 12 வகை புற்றுநோய்களை வரும் முன் தடுக்கலாம்.
பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கவும் இது உதவுகிறது. நுரையீரல், கணையம் ஆகிய உறுப்புகளில் வரும் புற்றுநோயையும் இந்தப் பழம் தடுக்கிறது. பக்கவிளைவுகள் எதுவும் வராது. புற்றுநோய் செல்கள் வளர விடாமல் தடுக்கும். புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பதால் அந்த செல்கள் குறைகிறது.
இந்த பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது. எலும்புகளை உறுதியாக்கும். சிறுநீர் பாதையில் வரும் தொற்றுகளை நீக்க உதவும். செரிமானத்திற்கும் இந்த பழம் நல்ல பலன்களை தரும். ஒற்றை தலைவலியை குணமாக்கும்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் முள் சீதாப்பழத்தை உண்பதால் உடல் வீக்கம் குறையும். நல்லது. வைட்டமின் பி3 உள்ளது. இது கொழுப்பை குறைக்க உதவுகிறது. இரத்தத்தில் காணப்படும் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம், குடல் புண், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், ஈரல் பாதிப்பு, இருமல் ஆகிய பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த பழம் நல்லது. மாதத்திற்கு இரண்டு தடவை அல்லது மூன்று தடவை இதை சாப்பிட்டாலும் போது. நல்ல பலன் கிடைக்கும். ஆனால் தெரியாமல் கூட கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் இதை சாப்பிட வேண்டாம்.