Rambutan Fruit: சொன்ன ஷாக் ஆகிடுவீங்க.. ரம்புட்டான் பழத்தில் இவ்வளவு நன்மைகளா!
ரம்புட்டான் பழம் அதன் இனிமையான சுவைக்கு மட்டுமல்ல, அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பிரபலமானது. இந்த பழம் எப்படி நம் உடலுக்கு நன்மை பயக்கிறது, யார் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Rambutan Fruit
ரம்புட்டான் பழம் பார்ப்பதற்கு முள் அமைப்பில் இருந்தாலும் உள்ளே ஒரு வெள்ளை, ஜெல்லி போன்றது. அதன் சுவை இனிமையானது. இந்த பழம் மலேசியா, இந்தோனேசியாவின் தாயகமாக கொண்டது. பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவியது. இதில் இரும்பு சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கார்போஹைட்ரேட், மினரல்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B3, புரதம் ஆகிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
Rambutan Fruit
கெட்ட கொழுப்பை குறைக்கும் ரம்புட்டான்
நம் உடலில் கெட்ட கொழுப்பை ரம்புட்டான் செயல்படாமல் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் கண் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது.
செரிமானம்:
இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனைகளை குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
Rambutan Fruit
நீர்சத்து
ரம்புட்டான் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலை நீரேற்றத்துடன் வைத்துப் பராமரிக்க முடிகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
ரம்புட்டானில் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.
சரும பாதுகாப்பு:
வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்கின்றன. சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுத்து, இள வயதிலேயே முதுமைத் தோற்றம் உண்டாவதைத் தவிர்க்கச் செய்கின்றன. சருமத்திற்கு உதவக்கூடிய கொலாஜன் என்ற புரதத்தின் உற்பத்திக்கு துணை நின்று, எலாஸ்ட்டிசிட்டி தன்மையுடன் உறுதியான சருமம் பெற ரம்புட்டான் பெரிதும் உதவுகிறது.
Pregnant Women
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்
ரம்புட்டான் பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகள் இந்த பழத்தை சாப்பிடும்போது அதிகம் கவனம் தேவை. வழுவழுப்பான இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிடும் பொழுது உஷாராக இருக்க வேண்டும்.
Rambutan Fruit
இந்த பழம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இந்த பழத்திற்கு சீசன் காலமாகும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் நேரங்களில் இந்த பழத்தை அதிகளவில் சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்வார்கள். ரம்புட்டான் கிலோ ரூ.200 முதல் ரூ.500 விற்பனை செய்யப்படுகிறது. ரம்புட்டான் பழம் காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும், பழுத்த பிறகுசிவப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறும். ரம்புட்டான் மரத்தில் பழம் காய்க்கும் நேரத்தில் மரத்தை முழுவதும் வலை போட்டு மூடி விடுவார்கள். பழத்தை குரங்கு, வவ்வால், அணில் போன்ற விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்கு இப்படி செய்யப்படுகிறது.